குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

 

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் குடியரசு தினவிழாவின் போது நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் குடியரசு தின விழாவை கொண்டாடுமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்க்க மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

அதே போல, கொரோனா காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், வயது மூப்பினை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

குடியரசு தினத்தின்று சென்னை மெரினா கடற்கரையில் காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை தவிர்த்து, வழக்கம் போல பல்வேறு துறையின் அணிவகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.