சிறப்பு காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை… குடும்பத்தினர் வெளியூர் சென்றபோது நிகழ்ந்த விபரீதம்…

 

சிறப்பு காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை… குடும்பத்தினர் வெளியூர் சென்றபோது நிகழ்ந்த விபரீதம்…

அரியலூர்

அரியலூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(53). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். ஜெகதீசன் தனது குடும்பத்துடன் தா.பழுர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஜெகதீசனின், மனைவி ராதா மற்றும் குழந்தைகள் தஞ்சைக்கு சென்றுள்ளனர். இதனால் அவர் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

சிறப்பு காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை… குடும்பத்தினர் வெளியூர் சென்றபோது நிகழ்ந்த விபரீதம்…

இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீசனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் தா.பழுர் காவல் நிலைய போலீசாரை தொடர்புகொண்டு அவரது வீட்டில் சென்று பார்க்க அறிவுறுத்தி உள்ளனர். அதன்பேரில் காவலர் ஒருவர் ஜெகதீசனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் தூக்கிட்டவாறு சடலாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த காவலர் தா.பழுர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

போலீசார், ஜெகதீசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பணிச்சுமை காரணமாகவே ஜெகதீசன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்க புகார் தெரிவித்து உள்ளனர்.