Home சினிமா பிக்பாஸ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு ஆரிக்கே - ஆனால்… #BiggBoss4

பிக்பாஸ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு ஆரிக்கே – ஆனால்… #BiggBoss4

பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து இன்றோடு 101 நாட்களாகின்றன. சென்ற சீசன்கள் போல இதற்கு பார்வையாளர்களின் ஆதரவு அதிகரித்தே உள்ளதாகத் தெரிகிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து நிகழ்ச்சி தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பே அலசப்பட்டது.

ரம்யா பாண்டியன், பாலாஜி, ஆரி, ரியோ, கேபிரியல்லா, ஷிவானி, நிஷா, அர்ச்சனா, விஜே சுசித்ரா, ஆஜித், ரேகா, வேல்முருகன், சோம சுந்தரம், அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, ஷனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் வாரத்தில் ரேகா, அடுத்து வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, ஷனம், ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா, ஆஜித், ஷிவானி என இந்த வரிசைப்படி வெளியேற்றப்பட்டனர். மீதமிருப்பது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, கேபி ஆகிய ஐந்து பேரும்தான்.

இந்த 5 பேரில் வெல்லப்போவது யார்… பிக்பாஸ் டைட்டில் யாருக்குக் கிடைக்கப்போகிறது என்று ஆவலோடு ஆடியன்ஸ் காத்திருக்கிறார்கள். சமூக ஊடங்களிலும் வாக்குகளின் அடிப்படையில் பார்க்கையில் ஆரிக்கே டைட்டில் வெல்ல வாய்ப்பு அதிகம்.

ஏனெனில், ஆரி 8 முறை சகப்போட்டியாளர்களால் எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தார். சென்ற வாரத்தில் அனைவரும் நாமினேஷன் என்பதால் ஆரியும் இருந்தார். அதில் பெரும்பாலான வாரங்களில் முதலில் சேவ் ஆனது ஆரி தான். அது அதிக வாக்குகள் அடிப்படையில் சேவ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், சமூக ஊடகத்தில் ஆரி ஆர்மி ரகளை செய்து வருகிறது. எதைத் தொட்டாலும் ஆரியோடு ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றன. ஆரி டைட்டில் வெல்வார் என்றாலுமே, ஆரிக்கு எதிரான வலுவான போட்டியாளர்களை ஆரி ஆர்மி வெளியேற்றியதால் எளிதாகக் கிடைத்த வெற்றி என்றே சொல்லப்படும்.

ஏனெனில், அனிதா, ஷனம், அர்ச்சனா மூவரும் ஆடியன்ஸ்க்கு நன்கு அறிமுகமான போட்டியாளர்கள். இவர்கள் ஏதேனும் ஒரு வாரத்தில் ஆரிக்கு எதிராகப் பேசினார்கள் என்று ஆரி ஆர்மி குறி வைத்து இவர்களை வெளியேற்றும் விதத்தில் வாக்குகளைப் பங்கிட்டு அளித்தது. அதனால்தான் சோம், கேபி இப்போதும் அங்கிருக்கிறார்கள். ஷிவானி சென்ற வாரம்தான் வெளியேறினார்.

பிக்பாஸில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பார் கமல். ஆனால், இந்த சீசனில் ஆரி வெல்வார் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். 99 சதவிகிதம் அது நடக்கவே வாய்ப்பும் இருக்கிறது. அந்த 1 சதவிகிதம் பிக்பாஸ் கையில்தான்.

மாவட்ட செய்திகள்

Most Popular

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சார்வரி வருடம் I தை 14 I புதன் கிழமை I ஜனவரி 27, 2021 இன்றைய ராசி பலன்!

லாக்டவுனில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு.. 14 கோடி ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் அம்பானி உள்ளிட்ட இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா...

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!