எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம்!

 

எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என கூறினார். உடனே அவையில் இருந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அதிமுக ஆட்சியில் தானே? அப்போது முதல்வராக நீங்கள் தானே இருந்தீர்கள்? என்றார்.

எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம்!

அதற்கு பதிலளித்த எடப்பாடி, கருணாநிதி அவர்கள் கூறியதை தங்களுக்கு தற்போது நிறைவு கூற விரும்புகிறேன். கலவரங்களை தவிர்க்க துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க முடியாது என்றார். இதனிடையே கொடநாடு வழக்கு தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது முதல்வரின் முகாமாக இருந்த இடத்தில் கொலை நடப்பதை எதில் சேர்ப்பது? அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? என முதல்வர் மு.க ஸ்டாலின் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, ஜெயலலிதா மறைந்ததும் சொத்துக்கள் அனைத்தும் தனியார் வசமாகிவிட்டன. கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. அதற்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் என்றார். அதற்கு மு.க ஸ்டாலின், அப்படி இருக்கும் பட்சத்தில் கொடநாடு வழக்கு விசாரணையை தடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, வழக்கு விசாரணைக்கு தடை கேட்கவில்லை. எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என்று பதிலளித்தார்.