வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? வெளுத்து வாங்கும் தங்கர்பச்சான்

 

வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? வெளுத்து வாங்கும் தங்கர்பச்சான்

சமூக பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டுவிட்டார். மின் கட்டண முறை மூலமாக மீண்டும் பேச தொடங்கியிருக்கிறார். யாருக்காக நாம் பேசுகிறோமோ அந்த மக்களே அதை புரிந்துகொள்ளாத போதுதான் சலிப்பு ஏற்பட்டு நிறுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள தங்கர்பச்சான், அதற்காக அப்படியே இருந்துவிட முடியுமா? என்று மீண்டும் பேச தொடங்கியிருக்கிறார்.

வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? வெளுத்து வாங்கும் தங்கர்பச்சான்

அது தொடர்பாக நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேர்மையான அதிகாரிகளை நியமித்து இருக்கிறார். ஆனால் அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்லாட்சியை தந்துவிட முடியாது. அனைத்து அமைச்சர்களும் அதற்கு மனது வைக்க வேண்டும் என்கிறார்.

100 நாள் வேலை திட்டத்தினால் மக்கள் சோம்பேறி ஆனதுதான் மிச்சம். அதை 150 நாட்கள் ஆகி விட்டார்கள். இந்த திட்டத்தால் உருப்படியாக ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை. இலவசத்தையும், டாஸ்மாக்கினையும் முதலில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளவர், ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் அதிகம் செலவு செய்வது கல்விக்கும் மருத்துவத்திற்கும் தான். அரசு கல்வியை கொடுத்தாலும் எல்லோரும் தனியாரையே அதிகம் நாடுகிறார்கள் . மக்கள் வரிப்பணத்தில் 50 சதவீதத்திற்கு மேல் அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது . ஆனால் அந்த அரசு ஊழியர்களே அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை. அவர்களின் குழந்தைகளையும் அரசு பள்ளிக்கு அனுப்புவதில்லை.

வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? வெளுத்து வாங்கும் தங்கர்பச்சான்

ஒவ்வொரு அரசியல்வாதியும் தனித்தனியாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் மருத்துவமும் கல்வியும் வணிகமாகிவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர் உயிர் பிழைக்க தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ மருத்துவ திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் அவரும் கடைசியில் தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றார். அரசு ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனைகள்தான், அரசு பள்ளிகள் தான் என்பதை கட்டாயமாக்கப்பட்டால் தான் அவற்றின் தரம் உயர்த்தப்படும் என்கிறார்.

பொதுவாக கட்சிகளையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒருகட்சி எதிர்தரப்பில் இருக்கின்ற ஆளை கடுமையாக திட்டுகின்றது. ஆனால் அடுத்தநாளே அடுத்த மாதமே அவர் தங்கள் கட்சியில் இணைந்து விட்டால் ஆரத்தழுவி சால்வை போடுகிறது. வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? எந்த கட்சிகள் நேர்மையை தகுதியாக வைத்து உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். நான் அப்படி ஒரு சூழலை எதிர்பார்க்கிறேன்.

வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? வெளுத்து வாங்கும் தங்கர்பச்சான்

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் சுமார் 35 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். எத்தனை பேர் அவர்களின் திறமையான செயல்பாடுகளால் அறியப்படுகின்றார்கள். வெகு சிலர் மட்டுமே அறியப்படுகிறார்கள். மிச்சம் இருப்போர் குற்ற சம்பவங்களின்போதும், மருத்துவமனையில் அனுமதி , விபத்து போன்றவற்றினால் மட்டுமே மக்களால் அறியப்படுகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரசியல் தலைவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றவியல் வழக்குகள் இருபது முப்பது ஆண்டுகள் வரைக்கும் இழுத்து அடிக்கப்படுகின்றன. சில தீர்ப்புகள் சம்பந்தப்பட்டவர்கள் இறந்த பின்னர்தான் வருகின்றன. இத்தகைய வழக்குகளை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் உதயமாகும் என்கிறார் அழுத்தமாக.