Home லைப்ஸ்டைல் கொரோனா காலத்தில் ஆபிஸ் செல்கிறீர்களா... இந்த 10 விஷயங்கள் கவனிக்க!

கொரோனா காலத்தில் ஆபிஸ் செல்கிறீர்களா… இந்த 10 விஷயங்கள் கவனிக்க!

கொரோனா கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, நாடே முடங்கியது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என எதுவுமே இயங்க வில்லை.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அடிப்படையாகக் கொண்டு ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று மத்திய அரசு, மாநிலம் விட்டு மாநிலம் வருபவர்களிடன் இ பாஸ் கேட்கக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.

mask day

தனியார் நிறுவனங்களும் இயங்குவதற்கு சில விதிமுறைகளோடு அனுமதி கொடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். அதனால், பலரும் ஆபிஸ்க்குச் சென்று வந்துகொண்டிருக்கலாம்.

கொரோனா காலத்தில் வெளியே செல்வது என்பது முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். அப்படி நீங்கள் ஆபிஸ்க்குச் செல்பவர் எனில் இந்த 10 விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.

sanitizer

ஒன்று: வீட்டிலிருந்து புறப்படும்போது, மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். மேலும், ஹேண்ட் சேனிடைஸைரை மறக்காமல் எடுத்துக்கொள்ளவும். டூ வீலரில் இயக்கும் முன் கைப்பிடிகளில் சேனிடைஸைரை அடிக்க மறக்காதீர்கள்.

இரண்டு: ஆபிஸின் கதவுகள் அநேகமாக திறந்தே இருக்கும். ஒருவேளை மூடியிருந்தால் அங்கு செக்க்யூரிட்டி இருந்தால் திறக்கச் சொல்லுங்கள். நீங்களே திறக்கும் சூழல் இருந்தால் திறந்த பின் சேனிடைஸரைக் கொண்டு கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.

மூன்று: அலுவலக நண்பர்களைப் பார்த்ததும் கை குலுக்குவது, கட்டிக்கொள்வது போன்றவற்றைச் செய்யாதீர்கள்.

வழக்கு

நான்கு: உங்கள் இருக்கையில் மெளஸ், டேபிள் ஆகியவை சுத்தமாக இருக்கின்றனவா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில், சேனிடைஸரைத் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐந்து: வீட்டிலிருந்தே மதிய உணவு எடுத்துச் செல்லுங்கள். போதிய இடைவெளி விட்டு நன்பர்களோடு உட்காருங்கள். உணவுகளைப் பகிர்ந்துகொள்வதை இன்னும் சில மாதங்களுக்குத் தவிர்க்கவும். வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்வதைத் தவிர்க்கவும்.

ஆறு: மீட்டிங் நடைபெற்றால் போதிய இடைவெளிவிட்டு உட்காருங்கள். எங்கும் தனி மனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.

hand wash

ஏழு: நண்பர்களோடு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர்கள் கொரொனா காலம் முடியும் வரை தவிர்ப்பது நல்லது.

எட்டு: அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்துகொள்ள மறக்க வேண்டாம். அதேபோல மாஸ்க்கின் முன்பக்கம் தொடாதீர்கள்.

ஒன்பது: உங்கள் நண்பர்களை அலுவலகத்திற்கு வர வழைத்துப் பார்ப்பதையும் தவிர்த்து விடுங்கள். அது உங்களுக்கும் நண்பருக்குமே நல்லது.

பத்து: ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும்போது வீட்டுக்கு வெளியில் காலணி அல்லது சூ வைக் கழற்றி பத்திரப் படுத்துங்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் யாரையும் தொடாது, குளியறைக்குள் சென்று விடுங்கள். அங்கே மாஸ்க்கை கழற்றி அதற்கென தனியாக வைத்திருக்கும் குப்பைத் தொட்டிக்குள் போடவும். உடைகளைக் கலைந்து, சோப்பில் நனைத்து ஊற வைக்கவும். முடிந்தால் துவைத்து விடவும். பின், நன்கு சோப்புப் போட்டு குளித்து விடவும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனா பாதிப்பில் 10 லட்சம் கடந்த 9-வது நாடு!

உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்குகள் உட்பல பல விஷயங்களைத் திட்டமிடுதலில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4...

தமிழகத்தைவிட்டு ஓடிய கொரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

ஊழலுக்கு எதிரான அரசு பாஜக- பிரதமர் மோடி

ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது, இதனையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு குறித்த...

மாநகராட்சி பகுதிகளில் 100 டன் குப்பைகள் அகற்றம்

ஈரோட்டில் ஆயுதபூஜையை ஒட்டி மாநகராட்சி பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதபூஜைக்காக வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!