திருட்டுக்கு நீ உடந்தையா? என்று திட்டிய மடாதிபதி ; கழுத்தை அறுத்துக்கொண்ட காவலாளி!

திருட்டுக்கு நீ உடந்தையா? என்று திட்டிய மடாதிபதி ; கழுத்தை அறுத்துக்கொண்ட காவலாளி!

நகை திருடியதாக மடாதிபதி திட்டியதால் காவலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாத்தி ராம்ஜி மடம் மிகவும் பிரபலமான ஒன்று. இது திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட வைணவ கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. திருப்பதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த மடத்திற்கு அர்ஜுன் தாஸ் சாமிகள் மடாதிபதியாக உள்ளார். கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ள இந்த மடத்தில் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருட்டுக்கு நீ உடந்தையா? என்று திட்டிய மடாதிபதி ; கழுத்தை அறுத்துக்கொண்ட காவலாளி!

இதுகுறித்து மடாதிபதி அர்ஜூன் தாஸ் சாமி பலரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது திருப்பதியில் உள்ள ஹாத்திரம் பாவாஜி மடத்தின் காவலாளி பசவராஜை அழைத்து விசாரித்துள்ளார். பசவராஜ் நீண்ட ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்ததால், திருட்டுக்கு உடந்தையா.. திருடியுள்ளாயா என்று அவர் கோபமாக கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நான் திருடவில்லையே என்று கத்தியபடி, அங்கிருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருட்டுக்கு நீ உடந்தையா? என்று திட்டிய மடாதிபதி ; கழுத்தை அறுத்துக்கொண்ட காவலாளி!

இதனால் அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள் காவலாளி பசவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.