Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கார்ன் ஃப்ளெக்ஸ் நல்லதா?

கார்ன் ஃப்ளெக்ஸ் நல்லதா?

காலை உணவு மிகவும் முக்கியமானது. முந்தைய நாள் இரவு சாப்பிட்டதற்கு பிறகு எடுக்கும், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைக்க உதவும் முதல் உணவு அது. நம்முடைய பாரம்பரிய சிறுதானிய உணவுகளை மறந்துவிட்டு, மேற்கத்திய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்ன் ஃபிளெக்ஸ், ஓட்ஸ் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். காலையில் கிண்ணத்தில் கார்ன் ஃபிளெக்ஸ் போட்டு, சர்க்கரை, பால் ஊற்றிக் கொடுத்துவிட்டால் போதும், குழந்தைகள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர் என நகர்ப்புறங்களில் உள்ள பல பெற்றோர் கூறுகின்றனர்.

கார்ன் ஃப்ளெக்ஸ் நல்லதா?
கார்ன் ஃப்ளெக்ஸ் நல்லதா?

மிக எளிதாக காலை பிரேக் ஃபாஸ்ட் முடிந்துவிடுகிறது. அதிக கஷ்டப்பட வேண்டியதே இல்லை. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதால் பல அம்மாக்கள் கார்ன் ஃபிளெக்ஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.

நார்ச்சத்தில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இது செல்கள் உற்பத்திக்கு குறிப்பாக கர்ப்ப காலத்தில் செல்கள் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

மிகக் கடுமையான முறையில் பதப்படுத்தப்பட்டு கார்ன் ஃபிளெக்ஸ் தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக செயற்கையான முறையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. மேலும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால், கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.

கார்ன் ஃபிளெக்ஸில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதனுடன் சர்க்கரையும் சேர்க்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படும். குறைந்த ஊட்டச்சத்து, அதிக கலோரி என்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய், இதய நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

கார்ன் ஃபிளெக்ஸ் முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதும் இல்லை. எப்போதாவது ஒரு முறை கார்ன் ஃபிளெக்ஸ் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனாக உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் கார்ன் ஃபிளெக்ஸ் சாப்பிடலாம். வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். பசி எடுக்காது.

அதை விட நம்முடைய காலை உணவுகளே ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளது. கார்ன் ஃபிளெக்ஸ் பயன்படுத்துவதற்கு பதில் நம் ஊரில் உள்ள கைக்குத்தல் அவலைப் பயன்படுத்தி காலை உணவு தயாரிக்கலாம்.

கார்ன் ஃப்ளெக்ஸ் நல்லதா?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்
TopTamilNews