தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு: விகடன் விருதை திருப்பியளித்த அறம் பட இயக்குனர்

 

தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு: விகடன் விருதை திருப்பியளித்த அறம் பட இயக்குனர்

தமிழில் பல ஆண்டுகளாக பாரம்பரியம் மிக்க பத்திரிகை குழுமமாக இருந்து வருகிறது விகடன். முதலில் பத்திரிக்கையாக தொடங்கப்பட்ட விகடனில், தற்போது ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சக்தி விகடன், சுட்டி விகடன், டாக்டர் விகடன் என பத்திற்கும் மேற்பட்ட இதழ்களை பிரசுரித்து வருகிறது. தனக்கென தனி வாசகர்கள் பட்டாளத்தையும் விகடன் சேர்த்து வைத்திருக்கிறது. பாரம்பரியம் மிக்க இந்த குழுமத்திலிருந்து ஆண்டுதோறும், திரை பிரபலங்களுக்கும், கவிஞர்கள் மற்றும் சினிமா அல்லாமல் சமுதாயத்தில் தொண்டு செய்துவரும் கலைஞர்கள், தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து விகடன் விருது வழங்கி வருகிறது. பத்திரிகை துறையில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் விகடன் குழுமம் தற்போது கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தங்கள் நிறுவனத்திலிருந்து ஒரே நாளில் 176 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. கலைஞர்கள் பலரும் விகடன் குழுமத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு: விகடன் விருதை திருப்பியளித்த அறம் பட இயக்குனர்
இந்நிலையில்அறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார், விகடன் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தனக்கு அக்குழுமம் வழங்கிய விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார். முன்னதாக திவ்ய பாரதி, மகிழ்நன், யுகபாரதி உள்ளிட்ட பல பிரபலங்கள் தனக்கு விகடன் குழுமம் வழங்கிய விருதை திருப்பியளித்தனர்.