#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

 

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மறுநாள் அரக்கோணத்தில் இரட்டை படுகொலை நடந்து தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோமனூர் கிராமத்தில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூர்யா என இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இதனால் இரட்டை கொலை தொடர்பாக விசாரனை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உண்மையில் அரக்கோணத்தில் நடந்த கொலைகளின் பின்னணி என்ன? தேர்தல் முன் விரோதமா? இதில் சாதியத்திற்கு பங்கு உள்ளதா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் சேனல் வாயிலாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி அளித்த நேர்காணலை இங்கு காணலாம்.

அரக்கோணம் இரட்டை படுகொலை குடிபோதையில் நடந்த படுகொலை? தேர்தல் முன் விரதத்தால் நடந்த கொலை? என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த இரட்டை படுகொலைக்கான காரணம் என்ன?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

பல இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதின் வெளிப்பாடு. இது ஒரு கட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. இதற்கும் அரசியலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் தேர்தலுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் இருப்பதாக மக்கள் கூறவில்லை. அதேபோல் மதுபோதையில் இந்த கொலைகள் நடைபெறவில்லை என்பதையும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள். அதையே தங்கள் அறிக்கையிலும் கூறியுள்ளோம்.

தேர்தல் முடிந்த மறுநாளே இரட்டைக் கொலைகள் நடைபெறுகிறது என்றால் அது தேர்தலுக்கான காரணமாக இல்லாமல் இருக்குமா?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

தேர்தல் காலத்திற்கு முன்பு நடந்து இருந்தாலும் அது தேர்தல்தான். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கொலைகள் நடந்திருந்தாலும் அது தேர்தல் காலம்தான். அத்தோடு தேர்தல் முடிவு வரும் வரை தேர்தல் காலம் என்று தான் கூற வேண்டும். அதனால் எந்த சமயத்தில் எதனால் நடக்கிறது என்பதை சொல்ல முடியாது. இறந்தவர்கள் கட்சியில் ஆக்டிவாக இருந்தவர்கள் என்று சொல்லமுடியாது . கட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது. இறந்த இரண்டு இளைஞர்களும் அவர்களது உறவினர்களின் பிரச்சனையை தட்டி கேட்டபோது நடந்தது என்று சொல்லப்படுகிறது. இதனால் இது தேர்தல் ஒரு நோக்கமாக இல்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிந்தது.

கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா இருவரும் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததாகவும், அதன் மூலம் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை என்றும் சொல்லப்படுகிறதே?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

ஒரு வேட்பாளர் தேர்தலில் நிற்கிறார் என்றால் அவரது சின்னத்தை கேட்டு வாக்கு கேட்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். அதனால் கொலை நடந்திருக்கிறது என்றால், அதை சொல்லி கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதுவும் குறிப்பாக அந்த இருவரை கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன?

அதிமுக வேட்பாளரை கிராமத்திற்குள் விடவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக கொலை செய்யப்பட்டது என்று கூறுகிறார்களே?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

அப்படி எதுவுமே மக்கள் பதிவு செய்யவில்லை. நாங்கள் விசாரித்ததில் எங்களுக்கு என்ன தெரிந்ததோ அதை தான் நாங்கள் அறிக்கையாக சமர்ப்பித்தோம்.

அரக்கோணம் இரட்டை கொலைக்கு காரணம் பாமக என்று விசிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சாதி இந்த கொலையின் பின்னணியில் உள்ளது என்று சொல்கிறார்களே?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

சாதி இந்த கொலையில் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. இதை யாரும் மறுக்கவில்லை. இந்த கட்சிகள் வரும் முன்னரே சாதி ஒடுக்குமுறை என்பது உள்ளது. ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால் அவர் எந்த கட்சியில் இருக்கிறாரோ அந்த கட்சியின் பெயரை குறிப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த கட்சியில் இருப்பதால்தான் அவர் கொலை செய்யப்படுகிறார் என்று சொல்ல முடியாது. ஒருவேளை திருமாவளவனிடம் ஆதாரங்கள் இருந்தால், அதை வெளியிட்டால் அதை யாரும் மறுக்கப் போவதில்லை. நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். பழமையான இரண்டு கட்சிகள் அங்கு வேலை செய்கிறார்கள் என்றால் அந்த இரண்டு கட்சிகளுக்கும் மோதல் ஏற்படுவது என்பது தேர்தலுக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. தேர்தல் காலத்தில் மட்டும் தான் நடக்கிறது என்றால் பல்வேறு வன்கொடுமைகள் பல காலங்களாக நடந்து வருகிறது. அதற்கு என்ன பதில் ? அதனால் அரசியல் கட்சிகளுடன் பின்னணி எப்போது உறுதிப்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று நடத்தும் போது அல்லது வன்முறை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை செய்யும் போது தான். அன்புமணி ராமதாஸ் அல்லது வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கு பிரச்சாரம் பண்ணியிருக்கிறார்கள் என்றோ அதனால் இந்த கொலைகள் நடைபெற்றது என்றோ ஆதாரங்களை வெளியிட்டால் யாரும் அதை மறுக்கப் போவதில்லை.

இதே விடுதலை சிறுத்தைகளும், பாமகவும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தார்கள். வன்னியர்களும், தலித் சமூகமும் ஒரு தொப்புள் கொடி உறவு என்றும் பிரிய மாட்டோம் என்றார்கள். இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவர்கள் ஒன்றாக இருந்த போதும் சாதி வேறுபாடுகள் இருந்தது. அவர்கள் பிரிந்து இருக்கும்போதும் இருக்கிறது. இந்த கட்சிகளால் சாதீய வேற்றுமைகள் இரண்டு பக்கமும் கூர் தீட்டப்படுகிறது என்று சொல்வீர்களா? நான் அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் அவர்கள் தப்பிக்க கூடாது என்பதை சாட்சிகள் மூலம் வலுப்படுத்தவே அங்கு சென்றேன். கட்சி ரீதியிலான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்.

அரக்கோணம் இரட்டைக்கொலை மதுபோதையில் நடந்ததா? அல்லது சாதிக் கொடுமையால் நடந்ததா?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

அதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதை திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். சாதிக் கொடுமையால் தான். இரண்டு கொலைகள் நடந்த இடத்தில் இரண்டு மது பாட்டில்கள் கிடந்ததாக காவல்துறையினர் தனது அறிக்கையில் கூறியுள்ளனர். அருந்ததியர்பாளையம் என்ற ஊரில் ஏற்கனவே யாராவது சென்று குடித்துவிட்டு அதை வீசி விட்டு சென்றார்களா? அல்லது கொலை செய்யப்பட்டவர்கள் கொண்டு சென்றார்களா? என்பது புலன் விசாரணை மூலமே தெரியவரும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் , அப்பகுதி மக்கள் கூறும்போது குடித்துவிட்டு சண்டை போடவில்லை என்று கூறுகிறார்கள். மது போதையில் சண்டை நடந்தது? கொலை நடந்தது என்றால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதற்கான தெளிவு வேண்டும் ஆனால் அதற்குள் இது மது போதையால் நடந்தது என்று எவ்வாறு இவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

தலித் மக்களுக்காக தலித் மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த மக்களுக்காக செயல்படுகிற இந்த சூழல் தமிழக அரசியலில் இல்லாமல் இருக்கிறதா?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

எல்லா கட்சிகளும் களத்தில் நின்றார்கள். அதை நான் என் கண்ணால் பார்த்தேன். மீடியாக்களில் யார் கருத்தை அதிகம் முன்னெடுத்து செல்ல நினைக்கிறார்களோ அல்லது யார் கையில் மீடியா அதிகம் உள்ளதோ அவர்கள் கருத்துக்கள் மட்டுமே வெளிவருகிறது. நான் பேசுவதைக் கூட ஒரு கட்சிக்கு எதிரானது என்பது என்பது போல சித்தரிக்கிறார்கள். என் குரலை அழுத்தவேண்டும், இதில் உள்ள உண்மைகள் வெளிவரக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் மற்ற கட்சிகள் எப்படி தங்களது சுதந்திரமான கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

திராவிடக் கட்சிகள் தலித் மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய இடத்தில் உள்ளார்களா?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

பேசவில்லையே…! அவர்கள் குரல் கேட்கவில்லை. கூட்டணியில் ஒரு கட்சி இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டார்களா ? அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினைகளை பார்ப்பதற்கு அவர்கள் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கைகழுவி விட்டார்களா? என்று தெரியவில்லை. எந்த பெரிய தலைவர்களும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி தான் பேசினாரே தவிர, அவர் இரட்டை படுகொலை நடந்த இடத்தை நேரில் சென்று பார்க்கலாம், விசாரிக்கலாம். திமுக தரப்பில் இருந்து ஒருவரை அனுப்பி விசாரிக்கலாம் . அவர்களின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடலாம். ஆனால் எதையுமே செய்யவில்லையே..?!

தமிழக அரசியலில் தலித் மக்களின் உரிமைகளை பேசக்கூடிய கட்சிகள் நிறைய உள்ளது. இந்த எல்லா கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பு தமிழக அரசியல் இல்லாமல் இருக்கிறதா?

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

எனக்கு அந்த ஆசை உள்ளது. எல்லோருக்கும் அந்த ஆசை இருந்தால் நல்லது.