அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு நியமனம்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு நியமனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு நியமனம்!

கடந்த 2018 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றார். அண்ணா பல்கலை. துணைவேந்தராக பணியாற்றி வந்த சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. எனவே இந்த புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு கலையரசன் குழுவை நியமித்தது. சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என கலையரசன் குழு தெரிவித்த நிலையில் சூரப்பா மீதான முறைகேடு குறித்து விசாரணை 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும் இன்னும் 3 முதல் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு நியமனம்!

இந்நிலையில் துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பா ஓய்வு பெற்றதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகிக்க 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். குழுவில் பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி உள்ளனர். துணைவேந்தர் சூரப்பாவின் 3 ஆண்டுகால பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேடும் பணி தீவிரமடைய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.