புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

உலகளவில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் தலைசிறந்த நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஐபோன் 11 ப்ரோ என்ற மாடலில் ஆப்பிள் லோகா தவறுதலாகப் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மாடலை அரிய வகை மாடலாக நினைத்து வாடிக்கையாளர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கொடுத்து அதிக விலைக்கு வாங்கினார். அந்த அளவிற்குச் சந்தையில் ஆப்பிள் ஐபோனுக்கு டிமாண்ட் இருக்கிறது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

எப்போதுமே புதுப்புது சாதனங்களைத் தயார் செய்து சந்தையில் வெளியிட்டி டிரெண்ட் செட்டராக இருந்துவருகிறது. இச்சூழலில் Spring Loaded என்ற நிகழ்ச்சியைக் காணொலி வாயிலாக அந்நிறுவனம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் புதிய சாதனங்கள் வெளியிடப்பட்டன. ஐபேட் ப்ரோ 2021, புதிய ஐமேக், ஆப்பிள் டிவி ஆகியவை வெளியிடப்பட்டன. குறிப்பாக ஆப்பிள் ஏர்டேக்ஸ் என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இச்சாதனாம் தொலைந்து போன பொருள்களைத் தேடுவதற்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

Apple AirTags:

சில நேரங்களில் நமக்கு மறதி ஏற்பட்டு அறையின் சாவி, ஹேண்ட் பேக் உள்ளிட்டவற்றை எங்கேயாவது விட்டுவிட்டு தேடிக் கொண்டிருப்போம். அதைத் தவிர்க்கவே இந்தப் புதிய வகை சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்டேக்ஸை நாம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களோடு இணைத்துவிட்டால் போதும். இதனை உங்களது ஐபோனோடு கனெக்ட் செய்து டிராக் செய்தால் தொலையும் பொருள்களின் இடத்தைக் கண்டறியலாம். ஏப்ரல் 30ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் 3,190 ரூபாயிலிருந்து 10,900 ரூபாயக விற்பனையாக உள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

24 இன்ச் iMac கணினி

M1 என்ற புதியவகை சிப் பொறுத்தப்பட்ட புதிய வகை ஐமேக் 11.5 மிமீ மெல்லிய திரையைக் கொண்டிருக்கும் என்றும், அதிவேகமாக இயங்கும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆறு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அதிநவீன 1080P ஹெச்டி கேமாரா ஆகிய கவனிக்கத்தக்க அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பச்சை, மஞ்சள், ஊதா, சில்வர், ஆரஞ்சு, பிங்க், பர்பிள் ஆகிய நிறங்களில் அறிமுகமாகவிருக்கும் இந்த புதிய கணினியின் விலை 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

Apple TV 4K

புதிய 4K டிவி பாக்ஸை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் சிரி ரிமோட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் டிவியுடன் இணைத்து 4K அனுபவத்தைக் கண்டுகளிக்கலாம். இந்த டிவி பாக்ஸானது 18,900 ரூபாய் மதிப்பில் விற்பனையாக உள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

Purple color Apple iPhone 12

கடந்த வருடத்தில் அமோக விற்பனையான ஐபோன் 12 பல வண்ணங்களில் வெளியானாலும் பர்பிள் வண்ணம் இல்லாதது வாடிக்கையாளர்களிடையே மனக்குறையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதை நிவர்த்தி செய்யும் விதமாக ஆப்பிள் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 79,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆப்பிளின் மிகச்சிறிய ஐபோனான ஐபோன் 12 மினியிலும் பர்பிள் வண்ண போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

iPad Pro

தற்போது 12.9 இன்ச் அகலமான ஐபேட் ஒன்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதேபோல 11 இன்ச் ஐபேட் ப்ரோவும் கிடைக்கிறது. சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய வண்ணங்களில் 128GB மெமரியில் தொடாங்கி 2TB வரையிலான ஐபேட் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்து ஆப்பிள் நிறுவனம் அசத்தல் – முழு விவரம் உள்ளே!

இதில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ 71,900 ரூபாயிலிருந்து விற்பனையாகிறது. 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 99,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.