ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் தொடக்கம் ! –30 நிமிட இலவச ஆலோசனை சேவை!

 

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் தொடக்கம் ! –30 நிமிட இலவச ஆலோசனை சேவை!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு தனது பொருட்களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் தொடங்கி உள்ள புதிய ஆன்லைன் தளம் இன்றுமுதல் செயல்பட தொடங்கியது.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் தொடக்கம் ! –30 நிமிட இலவச ஆலோசனை சேவை!

இந்த ஆன்லனன் ஸ்டோர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் இல்லை என தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், பொது முடக்க நிலை மாறி, சகஜ நிலை திரும்பும்போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஆன்லைன் ஸ்டோரில் பொருட்கள் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 3 நாட்களுக்குள் பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்றும், புதிதாக ஆப்பிள் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிட இலவச ஆலோசனை பெறும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் உரையாடி பொருட்கள் குறித்த சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் தொடக்கம் ! –30 நிமிட இலவச ஆலோசனை சேவை!

மேலும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் மற்றும் டேபிளட் வாங்கும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்.