App-ஐ தேடித்தேடிப் போய் உட்காருவதில் நம்மை அடிச்சுக்கவே முடியாது!

 

App-ஐ தேடித்தேடிப் போய் உட்காருவதில் நம்மை அடிச்சுக்கவே முடியாது!

நாளை ஏதாவது வெளியூர் செல்லும்போது, அங்கே உள்ள பொதுக்கழிவறையில் ஆண்கள் கழிவறைக்கு வெளியே உங்கள் போட்டோ ஒட்டப்பட்டு ஆண்கள் என எழுதியிருந்தால் ஆச்சர்யம் அடையவேண்டாம். விரைவாதம், விரைவீக்கம் விளம்பரங்களுக்குக்கூட நம் போட்டோவை அவர்களால் பயன்படுத்த முடியும்.

இப்போது ட்ரெண்டிங்கில் என்ன சேலஞ்ச் இருக்கிறதோ, அதனை செய்து முடிக்காவிட்டால் இணையத்தில் செல்லாக்காசாகிவிடுவோம் என பயந்தே, எல்லா சேலஞ்சையும் செய்துமுடித்துவிட்டுத்தான் லஞ்சில் கைவைக்கிறோம். வயதானால் எப்படி இருப்போம், சிறுவயதில் எப்படி இருப்போம், பாலினம் மாறி இருந்தால் முகம் எப்படி இருக்கும் என்பதை யூகித்து காட்டும் இந்த FaceApp செயலியை பயன்படுத்தாதோர் யார்?  டவுன்லோடு ஆனவுடன், கேட்கும் எல்லாவற்றுக்கும் Agree, OK, Yes என அதீத அவசரத்துடன் உள்ளேப்போய் போட்டோ போட்டபிறகுதான் நிம்மதி பிறக்கிறது. ஆனால் இதிலிருக்கும் ஆபத்தை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

Shurti Hasan - Faceapp

அந்த செயலியில் அப்லோட் செய்வதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் அந்த ஒரே ஒரு போட்டோ மட்டும்தான் அவர்களுக்கு கிடைக்கும் என நினைத்தால், அது தவறு. தரவிறக்க நிபந்தனைகளை ஏற்கும்போதே, நமது ஸ்மார்ட்போன் கேலரியில் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் அவர்களிடம் அடகு வைக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம். தேவையில்லை என நினைத்து டெலிட் செய்த போட்டோக்களைக்குட அவர்களால் எடுக்க முடியும். நமது முகத்தை மாற்றியமைத்து எங்கு வேண்டுமானாலும் அந்நிறுவனம் பயன்படுத்தவும் நாம் அனுமதிக்கிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

Faceapp - Putin

நாளை ஏதாவது வெளியூர் செல்லும்போது, அங்கே உள்ள பொதுக்கழிவறையில் ஆண்கள் கழிவறைக்கு வெளியே உங்கள் போட்டோ ஒட்டப்பட்டு ஆண்கள் என எழுதியிருந்தால் ஆச்சர்யம் அடையவேண்டாம். விரைவாதம், விரைவீக்கம் விளம்பரங்களுக்குக்கூட நம் போட்டோவை அவர்களால் பயன்படுத்த முடியும். முதன்முதலில் வெள்ளையர்கள் இந்தியா வந்தபோது வியாபாரம் என்று சொல்லித்தான் கடையை விரித்தார்கள். கடைசியில் என்ன ஆனது? இறுதியாக, ஒன்றே ஒன்று, எது இலவசமாக கிடைக்கிறதோ, அங்கே நம் தனிப்பட்ட தகவல்கள் விலை போய்விட்டது என்பதை அறிந்து இணையத்தில் வலம்வரவும்.