ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

 

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக்குழந்தைகளைக் காப்பதற்காக சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை இதயவியல் மற்றும் குழந்தை இருதய அறுவை சிகிச்சை துறை, சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் உடன் கைகோர்க்கிறது. பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும் 8 குழந்தைகள் பிறவி இதயக்குறைப்பாடு நோயால் [congenital heart disease] பாதிக்கப்பட்டவர்களாக பிறக்கிறார்கள். இந்தியாவில், ஆண்டுதோறும் சராசரியாக 2.5 லட்சம் குழந்தைகள் இதயக் குறைப்பாடு பிரச்னையுடன் பிறக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ உள்வைப்பு உபகரணங்களை பெற முடியாமல் போனால், அக்குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பாகவே மரணமடைந்து விடுகிறார்கள்.

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

குழந்தைகள் இதயவியல் திட்டம்:

சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் அனைத்து தரப்பையும் சேர்ந்த, இதயக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குகிறது. தமிழக முதல்வரின் சுகாதாரத் திட்டத்தின் உதவியுடன், அப்போலோஹாஸ்பிடல்ஸ் நடத்தும் சேவ் எ சைல்ட் ஹார்ட் இனிஷியேட்டிவ் வழங்கும் நன்கொடைகள், மக்களிடமிருந்து நிதி திரட்டும் க்ரவ்ட்ஃப்ண்ட்டிங் தளங்கள் மூலமான நிதி மற்றும் ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்டைச் சேர்ந்தவர்களைப் போல ரோட்டேரியன்களின் கருணை, அர்ப்பணிப்பு மற்றும் தாராளமனப்பான்மை ஆகியவற்றுடன் அப்போலோ உயர்நிர்வாகமட்டத்தினர் அளிக்கும் வரம்பற்ற ஆதரவு, நல்லெண்ணமுயற்சிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைக்கும்ரோட்டரி கிளப்புக்கும் இடையிலான கூட்டு செயல்பாட்டுத் திட்டம் 2021 ஜூலை 5-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் நல்லெண்ண நோக்கத்தின்படி, 1 ஆண்டு காலத்திற்குள் குறைந்தது 500 ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆரம்பக்கட்ட இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இதயவியல்அறுவை சிகிச்சை துறை டாக்டர் நெவில் சாலமன் தலைமையில்செயல்பட்டுவருகிறது. இப்பிரிவில் அவரது ஆலோசகர்களாக டாக்டர் பி. பலராமன் மற்றும் டாக்டர் வி சுவாமிநாதன் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் பத்து ஆண்டுகளில் 5000க்கும் மேற்பட்ட குழந்தை இதயக்குறைப்பாடு அறுவை சிகிச்சைகளை ஆச்சர்யப்படவைக்கும் வெற்றி சதவிகிதத்துடன் மேற்கொண்டுள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு, பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஓரு குழுவின் ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இக்குழுவைச் சேர்ந்த அனைவரும் நோயாளிகளின் பராமரிப்பில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவருபவர்கள். மேலும், அவர்களது துறையில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற நிபுணத்துவம் உடையவர்கள். குறிப்பாக குழந்தைகள் இதயவியல் மருத்துவப்பிரிவில் டாக்டர் எஸ்.ராஜகோபால் மற்றும் டாக்டர்ஹேமலதா ஆகிய இருவரும் மயக்கமருந்து நிபுணர்கள், தீவிரசிகிச்சைப்பிரிவில் நிபுணரான டாக்டர் சுசித்தரா மற்றும் அவரது குழு, திறந்த இதய அறுவை சிகிச்சையின் போது இதயம், நுரையீரல் கருவிகளை கையாளும் பெர்ஃப்யூஷனிஸ்ட்கள், செவிலியர்கள் மற்றும் துணைமருத்துவப்பணியாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

குழந்தைகளுக்கான ப்ரத்யேக மருத்துவமனையில், ப்ரத்யேக நுண்துளையிடல் அறுவைச் சிகிச்சைக்கான கேத்டெரிசேஷன் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியன மிகவும் சிக்கலான மருத்துவ பிரச்னைகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட நம்பமுடியாத அறுவை சிகிச்சை தீர்வுகளை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பிறந்து சில மணி நேரங்களே ஆன புதிதாய் பிறந்த குழந்தைகள்,1.2 கிலோ எடையுள்ள குழந்தைகளும் கூட, மிக சிக்கலான நிலைமையில் இருந்தாலும் அவர்களுக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நலமுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

இதற்கேற்றவகையில் பிறந்த குழந்தைக்கான மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள், வால்வ்பழுதுபார்ப்புகள், இதயசெயலிழப்பு, எக்மோமற்றும்ட்ரான்ஸ்ப்ளாண்ட்ஸ் உள்ளிட்ட குழந்தைகள் இதயவியல் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்குகிறது அப்போல்லோ.
பீடீயாட்ரிக் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறை டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன் தலைமையில், இதயசெயலிழப்பு / மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றிருக்கும் டாக்டர் அனுராதா உடன் இணைந்து இயங்கி வருகிறது. குழந்தைகள் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த துறை,10000-க்கும் மேற்பட்ட சிக்கலான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் 1.2 கிலோ எடைக்கும் குறைவான குழந்தைகளுக்கும் கூட சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்திருக்கிறது. மேலும் இந்த மருத்துவ துறையானது, குழந்தைகளுக்கான ப்ரத்யேக அதிநவீன கேத்லேப் உடன் செயல்படுகிறது. அறுவைசிகிச்சை இல்லாமலேயே வால்வ்களைப் பொருத்தும் பெர்க்யூடனேஷியஸ்வால்வ் இம்ப்ளாண்டேஷன் முறையில் இத்துறை முன்னோடியாக திகழ்ந்துவருகிறது.

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் சென்னையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் ரோட்டரி க்ளப்களில் ஒன்றாகும். மேலும் இந்த க்ளப் தனது சேவை திட்டங்களுக்கான நன்கு அறிய ஒன்றாகவும் திகழ்கிறது.’பெண் நலம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கும் 43 லட்சம் ரூபாய் செலவில் புற்று நோய் கண்டறிய உதவும் கேன்சர் ஸ்கிரீனிங் மொபைல் பஸ், ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் மற்றும் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.35 கோடிக்கும் மேல் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் ஹிந்துமிஷன் ஹாஸ்பிடலுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கும் ஏறக்குறைய 1.88 கோடி மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்றவை இந்த ரோட்டரிக்ள ப்செய்திருக்கும் நற்பணிதிட்டங்களில் குறிப்பிடத்தக்கவை. தற்போது, இந்த ரோட்டரிக்ளப் ஆஃப் தவிர்க்கக் கூடிய பார்வைஇழப்பு வராமல் தடுப்பதை செயல்படுத்தும் நோக்கில் அரவிந்த் ஐ கேர்சிஸ்டம் உடன்இணைந்து 1கோடி ரூபாய் செலவில் வடக்கு சென்னையில் 8 விஷன் சென்டர்களை அமைத்து வருகிறது.

ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற… ரோட்டரி கிளப்புடன் கைகோர்க்கும் அப்போலோ மருத்துவமனை!

ஆர்.சி.எம்.இ.யின் தலைவர் ரோட்டேரியன் சீனிவாச ராவ் இந்த கூட்டு முயற்சி குறித்து கூறுகையில், “ஹீலிங் டைனி ஹார்ட்ஸ் திட்டம், ஆர்.சி.எம்.இ யின் ஆண்டு திட்டங்களுடன் ஒன்றிப்போகும் வகையில் அமைந்துள்ளது. மிக அத்தியாவசியமான, உடனடியான மருத்துவ தேவை உள்ள 500 பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவ பராமரிப்பை வழங்குவதற்காக அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் அதன் ப்டீயாட்ரிக் கார்டியாக் சர்ஜரிசிஸ்டம் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.”என்றார்.

’ஹீலிங் டைனி ஹார்ட்ஸ் திட்டம்’[The Healing Tiny Hearts Project] என்பது சமூகம் மற்றும் பொருளாதா ரரீதியாக மிகவும் பின்தங்கிய 500 குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவிலேயே இருக்கும் இதய குறைபாடுகளை சரி செய்ய உதவும் நோக்கில் ஆர்.சி.எம்.இ- யினால் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு முயற்சியாகும். இந்த துறையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிகிச்சையின் வெற்றி விகிதத்தை கைவசம் வைத்திருக்கும் அப்போலோ குழுவினரால் மருத்துவ நடைமுறைகள்
மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும். கூடுதல் தகவலுக்கு 9841714433, 9952052429, 9940424386 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும்.