டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு… ஏவிவிட்டது பாஜகவா?

 

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு… ஏவிவிட்டது பாஜகவா?

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் மது மான்டேனா, விகாஸ் பால் ஆகியோர் வீடுகளில் காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இவர்களின் வீடுகள், பாண்டம் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகம் என 20 இடங்களில் சோதனை செய்யப்பட்டுவருகிறது. வரி ஏய்ப்பு காரணமாக இந்தத் திடீர் ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு… ஏவிவிட்டது பாஜகவா?

2011ஆம் ஆண்டு பாண்டம் (Phantom) என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் மது மான்டேனா, விகாஷ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆனால் விகாஷ் பால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் 2018ஆம் ஆண்டே இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு… ஏவிவிட்டது பாஜகவா?

அதிலிருந்தே இந்நிறுவனம் குறித்த சர்ச்சை எழுந்துவந்தது. இச்சூழலில் வரிகளை முறையாகக் கட்டவில்லை என புகார் எழுந்ததையடுத்து சோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய பாஜக அரசு தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்தச் சோதனையை மேற்கொள்ளவைப்பதகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின்றன.

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு… ஏவிவிட்டது பாஜகவா?

டாப்ஸியும் சரி, காஷ்யப்பும் சரி சர்காஸ்டிக்காக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர்கள்தாம். காஷ்யப் தான் இயக்கும் படத்தில் இந்துத்துவக் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காட்சி வைப்பார். அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவார். சமீபத்தில், டாப்ஸி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தார்.

சச்சின் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எதிராக ட்வீட் செய்திருந்த அவர், “ரிஹானாவின் ஒரு ட்வீட் உங்களின் (பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள்) ஒற்றுமையைக் குலைக்கிறதென்றால், உங்களை நீங்கள் தான் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தது. இவர்களின் குரல்களை நெறிக்கவே பாஜக வருமான வரித்துறையை ஏவிவிட்டதாகக் கூறப்படுகிறது.