கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

 

கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட பழங்குடியினர் நலதிட்ட அலுவலகத்தில் சமையலர் பணி நியமனம் தொடர்பாக லஞ்ச பணம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஆய்வுகுழு அலுவலர் அமுதா மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் இளநிலை பொறியாளர் எழில்மாறன் என்பவரது காரில் இருந்து கணக்கில் வராத 31 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அலுவலக உதவியாளர் செல்வராஜ் என்பவரது வீட்டில் இருந்து 6 லட்சம்‌ ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.