குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

 

குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

ரிஷிகள், முனிவர்கள், சந்நியாசிகள், சாதுக்கள், மகான்கள், என துறவு வாழ்க்கை மேற்கொண்டிருப்பவர்களால் சதுர் மாத விரதம் முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சதுர் என்றால் நான்கு. மழைகாலம் தொடங்குவதை அடுத்து ஆஷாட பௌர்ணமி அல்லது குருபூர்ணிமா காலத்தையொட்டி சதுர் மாத விரதத்தை துறவிகள் மேற்கொள்கின்றனர். துறவிகளுக்கு சொந்த தேவை அல்லது வேண்டுதல், பிரார்த்தனை, கோரிக்கைகள் என்று எதுவும் இல்லாவிட்டாலும் உலக நன்மை கருதியும் சாமான்ய சாதாரண மக்கள் மற்றும் சகல உயிரினங்களின் நலன் பொருட்டும் அவர்கள் விரதம் மேற்கோள்கின்றனர்.

குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

பொதுவாக ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இந்த 4 மாத அதாவது சதுர்மாசிய விரதத்தை துறவிகள் மேற்கொள்வது வழக்கம் . இந்த ஆண்டு முன் கூட்டியே இந்த விரதகாலம் தொடங்குகிறது. இந்நாளில் சன்னியாசிகள் வேத வியாசரை, மரபுப்படியான தங்கள் குருமார்களை , ஆச்சாரியர்களை வணங்கி வழிபட்டு தங்கள் விரதத்தை தொடங்குவார்கள்.

ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருப்பார்கள். குடீசகர்கள் எனப்படும் சன்னியாசிகள் குடிசைகளிலும் , பஹுதகர்கள் எனப்படுவோர் நீர் நிறைந்த நதிக்கரைகளில் குடில் அமைத்துக்கொண்டும் வாழ்வார்கள். பரிவ்ராஜகர்கள் என அழைக்கப்படும் மற்றொரு வகையினர் யாத்திரையிலேயே இருப்பார்கள். ஒரு ஊரில் மூன்று இரவுக்கு மேல் தங்கமாட்டார்கள் . பரிவ்ராஜகர்கள் எனும் துறவிகள் ஞானத்தை அடைந்திருப்பார்கள். குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களாக இருப்பார்கள். பிட்சை பெற்றுதான் உண்பார்கள். உடமைகள் என்று எதையும் தூக்கி சுமக்க மாட்டார்கள்.

குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

ஒரே ஊரில் அதிக நாட்கள் தங்கினால் அங்கு வாழும் மக்கள் மீது இவர்களுக்கோ அல்லது இவர்கள் மீது மக்களுக்கோ பற்று ஏற்படும் என்பதால் ஒரு இடத்தில் தங்காமல் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மழைக் காலத்திலோ ஊர் ஊராக போக முடியாது. ஏனெனில் மழைக் காலத்தில் புதிய புட்கள், செடிகள் துளிர் விடும். புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளிவரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை மிகவும் முக்கியமானது. அதோடு அந்நாளில் மழைகால பயணம் என்பது மிகுந்த சிரமமானது .புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் பயணிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி அது முடியும் வரை 4 மாதங்கள் ஒரே இடத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டார்கள்.

 

இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாதத்திலேயே மழைக்காலம் தொடங்கும். மழைக்காலம் தொடங்கும் பொழுது எங்கு இருக்கிறார்களோ அதே ஊரிலேயே 4 மாதங்களும் தங்கிவிடுவதே சதுர்மாத விரதம் என்றாயிற்று.

குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

எந்த ஊரில் தங்கினார்களோ அந்த ஊர் மக்களே சன்னியாசிகள் தற்காலிகமாக தங்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அவர்களின் தவம் , தற்சோதனை , வழிபாடுகளுக்கு காண தேவைகளையும் நிறைவேற்றி தந்தனர். தங்கள் ஊரில் தங்கிய துறவிகளிடமிருந்து 4 மாதங்களும் வேதவேதாந்த விளக்கங்கள் , சாஸ்திர சம்பிரதாயங்கள், இம்மைக்கு மறுமைக்கும் தேவையான ஈசன் அருளை பெறும் வழிகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

அந்தபண்டைய கால பழக்கம் இன்று நம் துறவிகளிடம் தொடர்கிறது. 4 மாதங்கள் துறவிகள் தங்கள் வழக்கமான பணிகளிகளில் இருந்து ஒதுங்கி ஓர் குறிப்பிட்ட மடத்திலோ, ஆசிரமத்திலோ, ஆலயத்திலோ தங்கி சதுர்மாசிய விரத்தை மேற்கொள்கின்றனர். அப்போது அவர்களுடன் பக்தர்களும் ஆன்மீக ஆர்வம் உள்ளோர்களும் பொது மக்களும் சந்நியாசிகளின் விரதம், வழிபாடுகள், உபதேசங்களில் பங்கேற்கிறார்கள்.

எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதரான இந்த துறவிகள் முற்றும் துறந்த முனிவர்கள் இருக்கிறார்கள். அக வாழ்விற்கு வழிகாட்டித் தன்னையுணரும் வழியை அணுகுவோருக்கு அவர்கள் காட்டுகிறார்கள். தங்களைப் பார்த்து எல்லா மக்களும் இந்த புண்ணியச் செயலைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

துறவிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் தங்களை சந்திக்கும் மக்களுக்கு அனேக ஆசிவாதங்களை வழங்குகிறார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால் நமது தேவைகள், பிரார்த்தனைகள் எளிதில் இறைவனால் நிறைவேற்றப்படுகிறது.

குரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்!

சதுர்மாத விரதகாலத்தில் பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கவும் சாதுக்களின் மடங்களுக்கும், வேதம் கற்கும் மாணவர்களுக்கும் வேதபாடசாலைகளுக்கும் நிதியுதவி செய்யதால் திருவருளுடன் குருவருளும், சகல வளமும் வாய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். 2-ம் மாதம் பால் தவிர்ப்பார்கள். 3- ம் மாதம் தயிர் சாப்பிட மாட்டாரகள். 4- ம் மாதம் உளுந்து உள்ளிட்ட சில பருப்பு வகை உணவுப் பொருட்களை சாப்பிடுவதில்லை .

இவையெல்லாம் ஆதிகாலத்தில் மேற்கொண்டதாக வரலாறு. இந்தக் காலத்திலும் சில துறவிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த சாதுர்மாஸ்ய விரதமேற்கொண்டுள்ள துறவிகளை, சந்நியாசிகளை, மாகன்களை, மடதிபதிகளை , ஆதினங்களை அணுகி ஆசிவாதம் பெற்று நலமும் வளமும் இறையருளும் பெறுவோம் .

மு.ரா.சுந்தரமூர்த்தி