படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து- மேலும் 3 உடல்கள் மீட்பு!

 

படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து- மேலும் 3 உடல்கள் மீட்பு!

கன்னியாகுமரி

படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதில் மாயமான மேலும் 3 மீனவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அலெக்சாண்டர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்களும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்களும் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆழ்டகடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அலெக்சாண்டர், தாசன் உள்ளிட்ட 3 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 9 மீனவர்களை தேடும் பணில் இந்திய கப்பல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து- மேலும் 3 உடல்கள் மீட்பு!

இந்த நிலையில், நேற்று மேலும் 3 மீனவர்களின் உடல்களை கப்பல் படையினர் மீட்டு, கர்நாடக மாநில கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கடலில் உடல் கிடந்ததால், அதனை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக, கர்நாடக கடலோர காவல் படை சார்பில் மீனவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், எஞ்சிய 6 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.