அம்பேத்கர் சிலை நிறுவ அறிவிப்பு- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

அம்பேத்கர் சிலை நிறுவ அறிவிப்பு- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் அருந்ததியர் இளைஞர் பேரவை தமிழ் புலிகள் கட்சி தலித் விடுதலை கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர் .இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் முழு உருவ சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து நேற்று ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்

அம்பேத்கர் சிலை நிறுவ அறிவிப்பு- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

சிறுத்தை வள்ளுவன் அருந்ததியர் இளைஞர் பேரவையின் தலைவர் வடிவேல் ராமன் தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் உட்பட 18 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் ஒரு வாரம் பொறுங்கள் அதற்குள் அரசிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சைபுதீன் தெரிவித்தார் இதற்கு முதலில் ஒத்துக் கொள்ளாத மற்ற அமைப்பினர் திட்டமிட்டபடி இன்று கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்து சென்றனர் ஆனால் இரவில் மீண்டும்

அம்பேத்கர் சிலை நிறுவ அறிவிப்பு- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

நிர்வாகிகள் ஆலோசித்து ஒருவாரத்திற்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர் எனினும் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 40 க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

ரமேஷ் கந்தசாமி