அண்ணாவின் 112வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

 

அண்ணாவின் 112வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 112வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தோற்றுவித் அண்ணாதுரை 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்றார். சுயமரியாதைத் திருமணம் சட்டமாக்கியது, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை ,சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் அண்ணாவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது எனலாம்.

அண்ணாவின் 112வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

இந்நிலையில் அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.