தமிழக மக்களுக்கு உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரை- அண்ணாமலை

 

தமிழக மக்களுக்கு உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரை- அண்ணாமலை

தமிழ் கடவுள் முருகனின் புகழை போற்றும் வகையிலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொருட்டும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனியில் யாத்திரையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், கர்நாடகா மாநிலம துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், மாநில துணைதலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக மக்களுக்கு உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரை- அண்ணாமலை

நிகழ்ச்சியில் பேசிய மாநில துணை தலைவர் அண்ணாமலை, “ஐந்து மாதத்திற்கு முன்னர் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டத்தை யாரும் கண்டிக்கவில்லை மாறாக ஆதரவு தெரிவித்தனர். இதை பார்த்துக்கொண்டு பாஜக எப்படி வேடிக்கைபார்க்கும். வெற்றி வேல் யாத்திரை தமிழக மக்களுக்கு உணர்ச்சி வர வேண்டும், உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்டது. கோவையை பாஜகவின் கோட்டையென நிரூபிக்க வேண்டும்

நம் பாஜக உறுப்பினர்களை கோட்டைக்கு அனுப்ப வேண்டும். கர்நாடகா துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயணன் எப்படி மிஸ்டர் கிளீனாக இருக்கிறாரோ அதே போல் லஞ்சம் வாங்காதவர்களை ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புவோம்” எனக் கூறினார்.