‘கிடா வெட்டி’ அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெறித்தனமாக வரவேற்ற ரசிகர்கள்!

 

‘கிடா வெட்டி’ அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெறித்தனமாக வரவேற்ற ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை ரஜினியின் மும்பை ரசிகர்கள் கிடா வெட்டி கொண்டாடியுள்ளனர். தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. நடிகர் அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,நடிகை குஷ்பு ,மீனா , பிரகாஷ்ராஜ் , சூரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

‘கிடா வெட்டி’ அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெறித்தனமாக வரவேற்ற ரசிகர்கள்!

இப்படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத் என்று நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24ம் தேதியுடன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நேற்று அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது. இதில் ரஜினிகாந்த் வேஷ்டி சட்டை அணிந்து திருவிழா நடைபெறுவது போன்ற பின்னணியில் கலக்கலாக இருக்கும்படி பர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கினர். அத்துடன் ரஜினிகாந்தின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அவரது ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

‘கிடா வெட்டி’ அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெறித்தனமாக வரவேற்ற ரசிகர்கள்!

அந்த வகையில் மும்பையில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை முன்னிட்டு கிடாவெட்டி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். கிடா தலையைச் உண்டாக்கி துடிக்கத் துடிக்க அதை ரஜினியின் போஸ்டர் முன்பு கொண்டு சென்றதுடன் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு விரும்பத்தகாத ஒன்றாகவே இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக நடிகர் சுதீப் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலி கொடுத்தது குறிப்பிடத்தக்கது