அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா இன்று தாக்கல்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா இன்று தாக்கல்!

சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த செப்.14 ஆம் தேதி தொடங்கியது. அன்று மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று அவை கூடிய நிலையில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் கடும் விவாதங்கள் ஏற்பட்டன. இதனிடையே அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா இன்று தாக்கல்!

இதனையடுத்து கொரோனா விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவும், மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். அண்ணா பல்கலைக் கழகம், அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற பெயரில் பிரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.