Home இந்தியா இந்தியாவுக்கு ஆபத்து: காஷ்மீரை குறிவைக்கும் துருக்கியின் ரகசிய ராணுவம்; போர் மூளும் அபாயம் - பதறவைக்கும் பின்னணி!

இந்தியாவுக்கு ஆபத்து: காஷ்மீரை குறிவைக்கும் துருக்கியின் ரகசிய ராணுவம்; போர் மூளும் அபாயம் – பதறவைக்கும் பின்னணி!

கிபி 1299ஆம் ஆண்டிருலிருந்து 1922ஆம் ஆண்டு வரை தென்கிழக்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என மூன்று கண்டங்களைக் கட்டி ஆண்டது ஒட்டோமான் பேரரசு. அக்கண்டங்களிலிருக்கும் பல நாடுகள் ஒட்டோமான் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றவைதாம். சிறிது சிறிதாகச் சிதைந்து 1922ஆம் ஆண்டோடு இப்பேரரசு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்பு அது அங்காராவைத் தலைமையிடமாகக் கொண்டு துருக்கியாக உலக வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டது.

உலகம் நவீனமயமானாலும் பழமை வெறியை இன்னமும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் துருக்கியின் தலைவர்கள். உலகத்தைக் கட்டி ஆண்ட மாபெரும் ஒட்டோமான் பேரரசை மீண்டும் எழுப்ப வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனைச் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான். இவரின் பார்வை தற்போது இந்தியா பக்கம் தாவியிருப்பது தான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image result for sadat turkish

சவுதி அரேபியா Vs துருக்கி:

இஸ்லாமிய நாடுகளின் இரண்டு பெரிய சக்திகளில் ஒன்று சவுதி அரேபியா என்றால் மற்றொன்று துருக்கி. சவுதியை வீழ்த்தி தனிப்பெரும் சக்தியாக உயர வேண்டும் என்பதும் எர்துவானின் நீண்ட கால விருப்பமாக இருக்கிறது. அதற்காகத் தன்னுடைய ஆதிக்கத்தின் எல்லையை விஸ்தரிக்க இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; குறிப்பாக காஷ்மீரைத் தேர்ந்தெடுக்க காரணம் அங்கு இந்தியாவுக்கும் மற்றொரு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்கனவே பெரும் பிரச்சினை பல வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டி தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தெற்காசியாவிலும் தனது பலத்தைக் காட்டி சவுதிக்குக் கிலி உண்டாக்கும் நோக்கமே அன்றி வேறில்லை.

Image result for saudi vs turkey

காஷ்மீரில் ஜிகாதிகளைக் களமிறக்கும் SADAT:

இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது கிரிஸ் நாட்டின் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஆண்ட்ரியாஸ் ஸ்மட்ஜ். எர்துவானின் திட்டத்தையும் அது எப்படி செயல்படுத்தப்படும் என்பதையும் ‘காஷ்மீருக்கு கூலிப்படையை (ஜிகாதிகள்) அனுப்பும் எர்துவான்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்திட்டத்தின் பின்னணியை விளக்கி பதறவைக்கிறார். அந்த அறிக்கையில் இருக்கும் தகவல்கள் பின்வருமாறு:

எர்துவான் தனது ரகசிய துணை ராணுவ அமைப்பான சதாத் (SADAT) மூலம் தான் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்திவருகிறார். இந்த அமைப்புக்குத் தலைமை தாங்குவது எர்துவானின் முன்னாள் தலைமை ராணுவ ஆலோசகர் அத்னான் டான்ரிவெர்டி.

யார் இந்த அத்னான் டான்ரிவெர்டி?


தீவிர இஸ்லாமிய சிந்தனை கொண்டவர் என்ற குற்றச்சாட்டினால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் எர்துவானைப் பின்னால் இருந்து இயக்குவது, சதாத் அமைப்பை வழிநடத்துவது, வீழ்த்த நினைக்கும் நாடுகளுக்கு ஜிகாதிகளை அனுப்புவது என நிழலுலக தாதாவாக வலம்வருபவர் அத்னான் தான். ஒரு இடத்தில் காலுன்ற அங்கிருக்கும் ஒருவரைக் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? காஷ்மீரில் பிறந்த சையத் குலாம் நபி ஃபாய் என்பவரின் உதவியுடன் இந்தத் திட்டத்தை அரங்கேற்ற நினைத்திருக்கிறார். சிரிய ஜிகாதிளை காஷ்மீருக்கு அனுப்பும் அசைன்மெண்ட் இவரிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for adnan tanriverdi with erdagan
அத்னான் டான்ரிவெர்டி

சையத்தின் அதிரவைக்கும் பின்னணி:

சையத்தின் பின்னணியும் சற்று பயங்கரமானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் காஷ்மீர் அமெரிக்க கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக ஜிகாதிகளைக் களமிறக்க முயன்றதாகக் கூறிய வழக்கில் கைதாகி தற்போது சிறையில் இருக்கிறார். விஷயம் அதுவல்ல. பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐயின் நிதியில் இவர் உறுப்பினராக இருக்கும் காஷ்மீர் அமெரிக்க கவுன்சில் இயங்குவது தான் ஹைலைட்.

Image result for Syed Ghulam Nabi Fai
சையத் குலாம் நபி ஃபாய்

பரந்துவிரியும் இஸ்லாமிய நெட்வொர்க்

அதேபோல எர்துவானின் சதாத் அமைப்புடனும் தொடர்பில் இருக்கிறது இந்த கவுன்சில். இஸ்லாமிய உலக தன்னார்வ நிறுவனமான IDSB உடனும் ஒத்துழைப்பில் இருக்கிறது. இப்படியாக விரிகிறது இந்த நெட்வொர்க். சையத் கைதாவதற்கு முன் அத்னானுடன் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியிருக்கிறார். இச்சந்திப்பில் காஷ்மீரில் எப்படி ஜிகாதிகளைக் களமிறக்குவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல சதாத் அமைப்பின் ஏராளமான நிகழ்ச்சிகளில் தவறாமல் சையத் பங்கேற்றிருப்பதும் கவனித்தக்கது.

Image result for turkey jihadis'

சதாத் அமைப்பு-ஜிகாதிகள் ஓர் பார்வை

ஜிகாதிகள் என்பவர்கள் தீவிர இஸ்லாமிய சிந்தனை கொண்டவர்கள். சதாத் ரகசிய அமைப்பு அப்படிப்பட்ட ஜிகாதிகளை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் அமைப்பாகும். இது துருக்கி, லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுவருகிறது. இதனைத் தலைமை தாங்கும் அத்னானின் நோக்கம் துருக்கியின் மதச்சார்பற்ற தன்மையை மாற்றி ஷரியாவை தலைமையிடமாகக் கொண்ட மாபெரும் இஸ்லாமிய ஆட்சியாகக் கட்டமைப்பதே.

Image result for sadat turkish

இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு இஸ்லாமிய ராணுவத்தை உருவாக்கி உலகின் மாபெரும் சக்தியாக உருமாற்றுவதே அவரின் கனவுகளில் ஒன்று. எர்துவானும் அத்னானும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள் என்றும், அவர் ஏன் எர்துவானின் பின்புலத்தில் இருக்கிறார் என்றும் இப்போது புரிந்திருக்கும்.

Image result for adnan tanriverdi with erdagan
எர்துவானுடன் அத்னான்

எர்துவான்-அத்னான் கூட்டணியின் பேராசையும் உலகிற்கு ஏற்படும் பேராபத்தும்

எர்துவான்-அத்னான் கூட்டணியின் ஒரே கனவு ஒட்டோமான் பேரரசை மீண்டும் நிறுவுவது மட்டுமே. இதன் விளைவு மீண்டும் ஒரு உலகப்போருக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. இதனால் துருக்கி இப்போது கிட்டத்தட்ட 1940ஆம் ஆண்டில் ஜெர்மனி இருந்த நிலைக்கு நகர்ந்துள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போருக்கு ஜெர்மனி வித்திட்டது போல மூன்றாம் உலகப்போருக்கு துருக்கி வித்திடப் போகிறது. இதன்மூலம் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து உலகெங்கிலும் ஒட்டோமான் பேரரசின் எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்ற ஒற்றை பேராசையால் மனிதர்களைக் கொன்றுகுவிக்க எத்தனித்து விட்டது.

Image result for second world war

இருப்பினும் 1945ஆம் ஆண்டு ஜெர்மனி வீழ்ந்தது போல் துருக்கியும் மண்ணைக் கவ்வும் என்பதே வரலாற்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. பூனைக்கு மணியை யார் கட்டுவது என்று தெரியாமல் இருந்த நிலையில், சத்தமில்லாமல் அந்த வேலையைச் செய்துவருகிறது துருக்கி. மூன்றாம் உலகப் போர் என்ற ஒன்று நிகழ்ந்தால் அதற்கு ஒரு காரணமாக துருக்கி இருக்கும் என சூடத்தில் அடிக்காத குறையாக சத்தியம் போட்டு கூறுகிறார்கள் நிபுணர்கள். பார்போம்… கவனிப்போம்…

மாவட்ட செய்திகள்

Most Popular

கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...

அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்

அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...

மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!

மதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...
TopTamilNews