அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

 

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

அண்ணன் முகேஷ் அம்பானி உலகின் டாப் 5 செல்வந்தரின் ஒருவர்.
தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்ஜியமாக உள்ளது.

2020 டிசம்பரில் தனது வங்கி இருப்பு 40 லட்ச ரூபாய் என கூறிய அனில் அம்பானி, 2020 ஜனவரி மாதத்தில் தனது இருப்பு 20 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது என அறிவித்தார். பிப்ரவரி மாதத்தில் தன்னிடம் எந்த தொகையும் இல்லை, தனது சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்றும் தெரிவித்ததுடன், தனது தொழில்கள் திவாலாகி விட்டன என்றும் அறிவித்தார்.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

தற்போது, இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், ஒரு வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜரான அவர், ”தான் எந்த ஆடம்பர வாழ்க்கையும் வாழவில்லை, ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் கட்டுக்கதை செய்கின்றன என கூறியுள்ளார்.

என்னிடம் ஒரே ஒரு கார் மட்டுமே உள்ளது, வழக்கு செலவுகளுக்காக தன்னிடம் இருந்த நகைகளை விற்று 9 கோடி ரூபாய் செலுத்தியதாக கூறினார். தற்போது தனது தாயிடம் 500 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும், மகனுக்கு 310 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகளிடன் கூறியுள்ளார்.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

அப்படி என்னதான் நடந்தது அனில் அம்பானிக்கு ?

திருபாய் அம்பானி மறைந்த பின்னர், அண்ணனுக்கும் தம்பிக்கும் சொத்துக்கள் சரிசமமாக பிரிக்கப்பட்டன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் என முக்கிய நிறுவனங்கள் அனில் அம்பானிக்கு கிடைத்தன.

ஆனால்,அந்த நிறுவனங்களை அவர், லாபகரமாக தொடர்ந்து இயக்கவில்லை. எல்லா தொழிலிலும் நஷ்டத்தையே சந்தித்தார்.
பிக் சினிமா என சினிமா துறையில் இறங்கி, நாடு முழுவதும் பல தியேட்டர்களை வாங்கினார். அதுவும் மிகப்பெரிய நஷ்டம்.
ஹாலிவுட் வரை முதலீடு செய்தும், எதுவும் தேறவில்லை .

மின்சாரம் தயாரிக்கும் தொழிலில் இறங்கி அங்கும் நஷ்டம். ஏற்கெனவே இருந்த தொலைத்தொடர்புத் துறை நஷ்டம் அடைந்தது மட்டுமல்ல, சுமார் 70 ஆயிரம் கோடி வரை கடனில் தள்ளியது.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

தொலைத் தொடர்பு கருவிகள் அளித்த எரிக்சன் நிறுவனம், முதலீடு செய்த சீன வங்கிகள் எல்லாம், சேர்ந்து அவர் கழுத்து நெரித்தன. நிறுவனங்களை விற்று 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை கட்டினார். ஆனால், மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை என்பதால், அந்த நிறுவனங்கள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில்தான், கடந்த வாரத்தில் காணொலி காட்சி மூலம் அனில் அம்பானி ஆஜராகி தனது நிலையை அறிவித்தார்.

தன்னுடைய செலவுகள் அனைத்தையும் தனது மகன் மற்றும் மனைவி பார்த்துக் கொள்வதாகவும், தனக்கென்று எந்த தனி சொத்துக்களும் இல்லை, ஆடம்பர கார் கூட கிடையாது என்றும் கூறி பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளார். வங்கிய கடன்களுக்கான வழக்குகள் சர்வதேச நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

அரசு உதவி செய்வது ஏன் ?

அனில் அம்பானியின் கடன்களை குறைப்பதற்காக அண்ணன் முகேஷ் அம்பானி பல உதவிகளையும் செய்து வருகிறார். தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு கடன் சுமையை குறைத்தார்.

அனில் அம்பானி நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்க எஸ்.பி.ஐ வங்கி கடன் அளித்துள்ளது. போதாக்குறைக்கு, வருங்கால வைப்பு நிதி ஆணையமும் 2,500 கோடி ரூபாய் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

எல்.ஐ.சி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதில் கணிசமான பங்குகளை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக வளர்ந்து இருக்கவேண்டிய அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இப்படி படுபாதாளத்தில் வீழ்ச்சியடைந்து திணறிக் கொண்டிருக்கிறது.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

ஒருபக்கம் அண்ணன் மிகப்பெரிய செல்வந்தராக வளர்ந்து கொண்டிருக்கும் போது, தம்பி மிகப்பெரிய ஏழையாக சரிந்து கொண்டிருக்கிறார்.

பரிதாபப்படும் நிலை உள்ளதா ?

இதில் பரிதாபப்பட ஏதுமில்லை என்கின்றனர் தொழில்துறையினர். எந்தத் திட்டமும் இல்லாமல் திடீர் திடீரென மிகப்பெரிய புராஜெக்ட்களில் இறங்கும்போது, வீழ்ச்சி சாதாரணமனதுதான் என்கின்றனர்.

ஆனால் , இவ்வளவு கடன்கள், நெருக்கடிகளுக்கு பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் மக்கள்.

கல்விக் கடன் செலுத்தாத மாணவர்கள் போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்தப்படுகின்றனர். சிறு நிறுவனங்களின் கடன்களுக்கு ஈடாக, தொழில்களை ஜப்தி செய்கின்றன. விவசாயக் கடன்கள் கட்ட முடியவில்லை என தகாத வார்த்தைகள் பேசி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகின்றன.

வங்கிகள் மீது இப்படியான புகார்கள் இருக்க , பல கோடியை அனில் அம்பானிக்கு ஏன் கடனாக கொடுக்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அனில் அம்பானி விவகாரம் – தில்லாலங்கடியா ? திவாலா ?

ஊழல் நிதி மோசடிகள் செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் ஒரு வகை என்றால்,
வெளிநாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்துகொண்டு மக்களின் பணத்தை சுரணடும் அனில் அம்பானி போன்றவர்கள் ஒருவகையில் மோசடிதான் செய்கிறார்கள் ? இதற்கு எப்போதுதான் தீர்வு ? என்பதுதான் தெரியவில்லை.