விக்கெட்டை இழந்த கடுப்பில் Chair-ஐ உடைத்த கோலி – வைரல் வீடியோ… வச்சி செய்த நெட்டிசன்கள்!

 

விக்கெட்டை இழந்த கடுப்பில் Chair-ஐ உடைத்த கோலி – வைரல் வீடியோ… வச்சி செய்த நெட்டிசன்கள்!

விராட் கோலி என்றால் Aggressive. Aggressive-க்கு ஒரு உருவம் இருந்தால் அது விராட் கோலியாகவே இருக்கும். அந்தளவிற்கு களத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்துபவர் கோலி. சுமார் 10 ஆண்டுகளாக கேப்டன் கூல் என்ற தோனியின் மந்திரத்தை மாற்றி ஒரு கேப்டன் Aggressive ஆகவும் இருக்கலாம் என்று உணர்த்திக் காட்டியவர். 90ஸ் கிட்ஸ்கள் கங்குலியை அந்த மாதிரி பார்த்திருப்பார்கள். நிகழ்காலத்தில் 2k கிட்ஸ்களுக்கு கோலி தான் அதனை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறார்.

விக்கெட்டை இழந்த கடுப்பில் Chair-ஐ உடைத்த கோலி – வைரல் வீடியோ… வச்சி செய்த நெட்டிசன்கள்!
விக்கெட்டை இழந்த கடுப்பில் Chair-ஐ உடைத்த கோலி – வைரல் வீடியோ… வச்சி செய்த நெட்டிசன்கள்!

ஒருவகையில் களத்தில் இந்த முறை ஓரளவுக்கு கைகொடுக்கும் ஒன்று தான். ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் விளையாடும்போது அந்நாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுமே வேண்டுமென்றே வம்பிழுப்பார்கள். அந்த மாதிரியான சமயத்தில் கோலி தனக்கே உரித்தான பாணியில் பதிலடி கொடுப்பார். இது அணியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு ஒரு பூஸ்ட். இதுபோன்று வீரர்களை உற்சாகம் செய்துகொண்டே இருப்பார். ஆனால் நேற்று அவர் செய்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

விக்கெட்டை இழந்த கடுப்பில் Chair-ஐ உடைத்த கோலி – வைரல் வீடியோ… வச்சி செய்த நெட்டிசன்கள்!

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியுடன் ஆர்சிபி அணி மோதியது. நூலிழையில் ஆர்சிபி வெற்றிக்கனியையும் சுவைத்துவிட்டது. விஷயம் அதுவல்ல. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல்லும் கோலியும் களமிறங்கினர். இதில் படிக்கல்லும் சபாஷ் அஹமத்தும் குறைவான ரன்களில் அவுட்டானதால் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. கோலியுடன் மேக்ஸ்வெல் கைகோத்தார். இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

கோலி நன்றாக செட்டாகி இருந்தார். செட்டான பின் ருத்ரதாண்டவம் ஆடுவது தான் அவரது பாலிசி என்பதால் பீஸ்ட் மோடுக்கு தாவ ரெடியாக இருந்தார். இச்சூழலில் ஜெசன் ஹோல்டர் 13ஆவது ஓவரின் முதல் பந்தை வீச வந்தார். அப்போது அவர் கோலிக்கு டேக்கா கொடுக்கும் விதமாக பேக் ஆஃப் லென்த்தில் ஸ்லோ பவுன்சர் வீசினார். இதனைச் சற்றும் எதிர்பாராத கோலி மட்டையைச் சுழற்ற பந்து டாப் எட்ஜ்ஜில் பட்டு 3D பிளேயர் விஜய சங்கரின் கைகளில் பந்து தஞ்சமடைந்தது. இதனால் அப்செட் ஆகிவிட்டார் கோலி.

விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த வெறியுடன் அங்கிருந்த நாற்காலியை பேட்டை கொண்டு அடித்து தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை எப்படியோ கேமராமேன் படம் பிடிக்க, ட்விட்டர்வாசிகள் கோலியை சம்பவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஐபிஎல் நிர்வாக விதிமுறைப்படி முதல் நிலை விதி மீறலாகும். இந்த விதிமீறலுக்கு போட்டியின் நடுவர்கள் தண்டனை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம். அவர்களின் முடிவே இறுதியானது. இருப்பினும், தான் செய்த தவறை போட்டி முடிந்த பிறகு கோலி ஒப்புக்கொண்டார். தாங்கள் போட்ட பிளானை சரியாக அப்ளே செய்ய முடியாததால் உருவான அழுத்ததால் அவ்வாறு செய்ததாக விளக்கம் கொடுத்தார்.