டிவிக்கான ஆண்டிராய்ட் டாங்கிள் கருவிஅறிமுகப்படுத்தும் கூகுள் ?

 

டிவிக்கான ஆண்டிராய்ட் டாங்கிள் கருவிஅறிமுகப்படுத்தும் கூகுள் ?

கூகுள் நிறுவனம் சப்ரினா என்ற பெயரில் டிவிக்ளுக்கான ஆண்டிராய்ட் டாங்கிள் கருவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிவிக்கான ஆண்டிராய்ட் டாங்கிள் கருவிஅறிமுகப்படுத்தும் கூகுள் ?

இந்தியாவில், ஏற்கனவே அமேசான் பயர் ஸ்டிக், எம்ஐ ஆண்டிராய்ட் ஸ்டிக் ஆகியவை விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் ஆண்டிராய்டையே தன் வசம் வைத்துள்ள கூகுள் நிறுவனம், இந்த டாங்கிள் களத்தில் குதிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சப்ரினா – விலை 3,600 ?

டிவிக்கான ஆண்டிராய்ட் டாங்கிள் கருவிஅறிமுகப்படுத்தும் கூகுள் ?


இது தொடர்பாக 9டுஃபைகூகுள் என்ற தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, சப்ரினா என்ற பெயரில் ஆண்டிராய்ட் டாங்கிளை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இவை ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள சில முன்னணி விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வந்துவிட்டதாவும், கூறப்பட்டுள்ளது. மேலும், அதன் விலை இந்திய மதிப்பில் மூன்றாயிரத்து 600 ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30ம் தேதி அறிமுகம் – 2 ஜிபி ரேம்


இந்த ஆண்டிராய்ட் டாங்கிளை வரும் 30ம் தேதி கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டிராய்ட் டாங்கிள் கருவி, 2ஜிபி ரேம், ஆம்லாஜிக் குவாட் கோர் பிராசசர், உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவர உள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த தகவல்களை இதுவரை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-

முத்துக்குமார்