தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.. கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

 

தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.. கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் அந்த நிறுவனங்களை தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர பிரிவு செயலாளர் கே.ராமகிருஷ்ணா இது தொடர்பாக கூறியதாவது: கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் சேதமடைந்துள்ளது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் அவர் தலைமையிலான மத்திய அரசும் இதற்கு காரணம். இதற்கு மாறாக, இது தங்களது பொறுப்பு அல்ல, அது மாநில அரசுகளின் பொறுப்பு என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள். நீங்களே தடுப்பூசிகளே வாங்கி கொள்ளுங்கள் என்று மாநில அரசுகளிடம் அவர்கள் (மத்திய அரசு) சொல்கிறார்கள். முதல் அலைக்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தியதற்கான வெற்றியை கோரினார்கள். ஆனால் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தோல்விக்கு தங்களுக்கு சொந்தமானது அல்ல என்கிறார்கள்.

தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.. கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கே.ராமகிருஷ்ணா

மோடி அரசாங்கம் தேர்தல்களை பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது. ஆனால் கோவிட் கட்டுப்படுத்துவது குறித்து கவலைப்படவில்லை. இரண்டாவது அலை மிகவும் அழிவுகரமானதாக இருப்பதற்கு இதுவே காரணம். மேற்கு வங்க தேர்தல்களில் மோடி அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை. தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் அந்த நிறுவனங்களை தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தடுப்பூசிகளை வாங்கவில்லை என்று மாநில அரசை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தடுப்பூசியை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.. கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிர்பதற்கு மத்திய அரசின் ஆதரவை விரும்புகிறது. அந்த காரணத்துக்காக பா.ஜ.க.வை ஆதரிப்பதை நியாயப்படுத்த முடியாது. சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திராவை ஏமாற்றியது பா.ஜ.க.தான். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார்மயமாக்க முயற்சி செய்கிறது. அதே பா.ஜ.க. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிறது. பல தொழிலாளர் சார்பு சட்டங்கள் மோடி அரசாங்கத்தால் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.