செம்மரக்கடத்தல் அபகரிப்புக் குழு தலைவன் உள்பட 10 பேர் கைது

 

செம்மரக்கடத்தல் அபகரிப்புக் குழு தலைவன் உள்பட 10 பேர் கைது

ஆந்திரா

ஆந்திராவில் டிப்பர் லாரி மீது செம்மரக்கடத்தல் கார் மோதி 5 தமிழர்கள் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த செம்மரக்கடத்தல் அபகரிப்பு குழு தலைவர் ஷேக்அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.. ஆந்திர மாநிலம் கடப்பா அருகே கடந்த ஒன்றாம் தேதி டிப்பர் லாரி மீது, செம்மரங்களை கடத்திச்சென்ற காரும், அதன் பாதுகாப்பிற்கு சென்ற மற்றொரு காரும் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்தன.

செம்மரக்கடத்தல் அபகரிப்புக் குழு தலைவன் உள்பட 10 பேர் கைது

இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பெங்களூரை சேர்ந்த செம்மர அபகரிப்பு குழு, காரில் கடத்திச்சென்ற செம்மரக்கட்டைகளை அபகரிக்க முயற்சித்தபோது விபத்து நேரிட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் செம்மர அபகரிப்பு குழு தலைவர் ஷேக்அப்துல் ஹக்கீம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

செம்மரக்கடத்தல் அபகரிப்புக் குழு தலைவன் உள்பட 10 பேர் கைது


இந்நிலையில் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட ஷேக்அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சேக்அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.