ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.15,000- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

 

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.15,000- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 9,33,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஒருபுறம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அரசுத் தரப்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.15,000- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்நிலையில் ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழை மக்களும் சடலங்களை பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் அடக்கம் செய்யவும், இறுதிச்சடங்கு செலவிற்கு இந்த தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை சுகாதாரம், மருந்துகள், உணவின் தரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். நோயாளிகள் புகார் தெரிவிக்க கோவிட் கால் செண்டர் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.