3 தலைநகரங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது… ஆந்திர கவர்னருக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

 

3 தலைநகரங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது… ஆந்திர கவர்னருக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

ஆந்திர பிரதேசம் பிரிவினைக்கு பிறகு தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் அங்கு அதற்கான வசதிகள் உருவாக்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை அரசு வாங்கியது. மேலும் பிரம்மாண்டமான சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

3 தலைநகரங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது… ஆந்திர கவர்னருக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, நிர்வாக வசதிக்காக அமராவதியோடு, விசாகப்பட்டிணம், கானூலையும் சேர்த்து மாநிலத்தில் மொத்தம் 3 தலைநகரங்களை அமைக்க முடிவு செய்தது. மேலும் இது தொடர்பான மசோதாவை மாநில சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் அரசு நிறைவேற்றியது. ஆனால் எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள சட்ட மேலவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதேபோல் அமராவதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தை ரத்து செய்வதற்கான மசோதாவையும் மேலவையில் நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றிய ஒரு மசோதாவுக்கு ஒரு மாதம் வரை சட்ட மேலவை ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அந்த மசோதா ஒப்புதல் பெறப்பட்டதாகவே கருதப்படும். அதன்படி, 3 தலைநகரங்களை நிறுவும் மசோதா, தலைநகரம் பகுதி மேம்பாட்டு ஆணையம் ரத்து மசோதா (சி.ஆர்.டி.ஏ) ஆகியவற்றை அம்மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தனின் ஒப்புதலுக்காக ஜெகன் மோகன் அரசு அனுப்பியது.

3 தலைநகரங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது… ஆந்திர கவர்னருக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கூடாது என அம்மாநில பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர பிரதேச பா.ஜ.க. தலைவர் கண்ணா லெட்சுமி நாரயணா கூறியிருப்பதாவது: ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் ஒரு தலைநகரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது. அரசியலமைப்பு அம்சங்கள், பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகள் மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவற்றை பரிசீலனை செய்து 3 தலைநகரங்கள் மசோதா மற்றும் சி.ஆர்.டி.ஏ. ரத்து மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அந்த கடிதத்தில், ஒரே தலைநகரமாக அமராவதி இருக்க வேண்டியதற்கான பல்வேறு காரணங்களை அதில் கண்ணா லெட்சுமி நாராயணா குறிப்பிட்டுள்ளார்.