மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை!

 

மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர். இதனால் தடுப்பூசிகளின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் உள்ள பணிகளை விரைந்து முடித்து அரசே தடுப்பூசி உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை!

அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசி தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்கிறார்கள் நிபுணர்கள். 18 வயதுக்கு மேற்பட்ட 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது இமாலயப் பணி. மத்திய அரசுக்கும் இது மிகப்பெரிய செலவை ஏற்படுத்தும். அரசு மருத்துவமனைகளை அதிகரிக்கவேண்டும். மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி போதுமான அளவுக்கு மருத்துவ பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் தடுப்பூசி திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய சாதகமான சூழலை எதிர்கொள்ள தடுப்பு மையத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை!

செங்கல்பட்டில் மத்திய அரசு நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி வளாகத்தின் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்தால் உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை உற்பத்தி செய்வது சாத்தியமாகும். இந்த வளாகத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை தவிர்த்து அரசே தடுப்பூசி தயாரிப்பது சிறப்பாக இருக்கும். எனவே செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்புசி வளாகத்தில் பணிகளை முடித்து, தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.