பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழக அரசு

 

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழக அரசு

கொரோனா தொற்று குறைந்த பிறகு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழக அரசு

மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழக அரசு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து கொரொனா பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள என்ஜினீயரிங், விவசாய படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நீட் தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தோம். கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வினை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்” எனக் கூறினார்.