காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது… அ.தி.மு.க முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

 

காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது… அ.தி.மு.க முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

காவல் துறையின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது, வண்டிகளை மடக்கி அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துகிறார்கள் என்று அ.தி.மு.க முன்னாள் எம்.பி அர்ஜுனன் புகார் கூறியுள்ளார்.

காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது… அ.தி.மு.க முன்னாள் எம்.பி குற்றச்சாட்டுசேலத்தில் வாகனத் தனிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் ஆபாசமாக பேசி, எஸ்.ஐ ஒருவரை எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் அ.தி.மு.க முன்னாள் எம்.பி அர்ஜுனன். அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அர்ஜுனன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது… அ.தி.மு.க முன்னாள் எம்.பி குற்றச்சாட்டுஅதில், “சேலத்தில் இருந்து ஓமலூரில் உள்ள தோட்டத்துக்கு தினமும் சென்று வருவேன். சோதனைச் சாவடியில் என் வாகனத்தை நிறுத்திய காவலர்கள் இ-பாஸ் உள்ளதா என்று கேட்டார்கள். நான் இதே ஊர்தான், வண்டியும் இந்த ஊர் பதிவு எண் கொண்டதுதான் என்று கூறினேன். இதை அவர்கள் ஏற்காததால் நான் முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ என்று கூறினேன். ஐடி கார்டு உள்ளதா என்று கேட்டபோது, இதை எல்லாம் நெற்றியிலா ஒட்டிக்கொள்ள முடியும் என்று கேட்டேன். உடனே ஐயாவிடம் வந்து பேசு என்றார்கள். திடீரென்று எஸ்.எஸ்.ஐ ரமேஷ் என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினார். வண்டியிலிருந்து இழுத்து வெளியே போடுங்கடா என்று ஒருமையில் பேசியதால் அந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. காவல்துறையினரின் அராஜகம் எல்லை மீறி சென்றுவிட்டது. சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வண்டிகளை மடக்கி அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யே தமிழகத்தில் போலீசாரின் அராஜகம் எல்லை மீறி சென்றுவிட்டது என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.