நெருங்கும் பண்டிகை காலம் : வாழை மற்றும் மலர் விலை கிடுகிடு உயர்வு!

 

நெருங்கும் பண்டிகை காலம் : வாழை மற்றும் மலர் விலை கிடுகிடு உயர்வு!

பண்டிகை காலம் நெருங்குவதால் தமிழகத்தில் பூ மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் சாலையில் வாழைக்காய் கமிஷன் மண்டி மார்க்கெட்டில் திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வாழைத்தார்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாழைதார்களை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் விலை பேசி வாங்கி செல்வது வழக்கம். கடந்த மாத காலம் தென்மேற்கு பருவமழை காரணமாக வாழை விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து வாழை வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நெருங்கும் பண்டிகை காலம் : வாழை மற்றும் மலர் விலை கிடுகிடு உயர்வு!

இந்நிலையில் வாழைத்தார் வரத்து அதிகரித்தாலும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என பண்டிகை காலம் வருவதால் வாழையின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக செவ்வாழைத்தார் ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1,350 வரை விற்கப்படுகிறது . அதேபோல் மோரீஸ் விலை ரூ.700, பூவன்தார் ரூ.800 , கற்பூரவள்ளி ரூ.700, ரஸ்தாளி ரூ.650, ரஷ்தாளி ஒருகிலோ ரூ.45 என விற்பனை ஆகி வருகிறது. இருப்பினும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை காலம் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

நெருங்கும் பண்டிகை காலம் : வாழை மற்றும் மலர் விலை கிடுகிடு உயர்வு!

அதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ .70க்கு விற்கப்பட்ட அரளி பூ தற்போது கிலோ ஒன்றுக்கு 320 ரூபாய்க்கும் ரோஜா 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது . மஞ்சள் சிவந்தி ரூ. 250 , நந்தியாவட்டம் ரூ. 350க்கும் விற்கப்படுகிறது. பூக்களின் இந்த விலை உயர்வு பொதுமக்களை தலைசுற்ற வைத்துள்ளது.