ஆட்டோ பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிப்பு – ஈரோடு ஆட்டோ ஓட்டுநரின் வழக்கம்

 

ஆட்டோ பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிப்பு – ஈரோடு ஆட்டோ ஓட்டுநரின் வழக்கம்

ஈரோடு: ஈரோட்டில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளித்து அழைத்து செல்லும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பிற துறையினர் போலவே ஆட்டோ ஓட்டுநர்களும் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். தினமும் சவாரி ஓட்டினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இருந்த பல ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கை கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிப்பு – ஈரோடு ஆட்டோ ஓட்டுநரின் வழக்கம்

இந்நிலையில், ஈரோட்டில் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் செயல் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் தனது ஆட்டோவில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு அவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்திய பின்னரே அவர்களை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். இது அப்பகுதி மக்களிடையே அவருக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.