×

ரூ.5,400 கோடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கிய பா.ஜ.அரசு!

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளில் ரூ.5,400 கோடிக்கு மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்களை வாங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நம் நாட்டில் தற்போது சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை(இ.வி.எம்.) பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலையும் பழைய மாதிரி வாக்குச் சீட்டு முறையில் நடத்த
 

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளில் ரூ.5,400 கோடிக்கு மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்களை வாங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் தற்போது சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை(இ.வி.எம்.) பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலையும் பழைய மாதிரி வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

ஆனாலும் தேர்தல் ஆணையம் முடியாது என்று கூறிவிட்டது. மேலும், கடந்த நாடாளுமன்ற தோ்தலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்திதான் தேர்தலை நடத்தியது. இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தேர்தல் செலவுகள் தொடர்பாக நிலுவையில் பாக்கிகளை கொடுப்பதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக 2017-18 முதல் 2019-20 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசு தேர்தலுக்காக மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி செலவிட்டது. 

மொத்த செலவில் 60 சதவீதத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு எந்திரங்களுக்கு சென்றுள்ளது. சுமார் 5,400 கோடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்கியது. இதுதவிர, நேரடி செலவாக ரூ.2,019 கோடியும், வாக்காளர் அடையாள அட்டைக்காக ரூ.200 கோடியும், இதர தேர்தல் செலவினங்களுக்காக ரூ.1,317 கோடியும் மத்திய அரசு செலவு செய்தது.