×

கவின் ஒரு Game Changer ! டிவிட்டரில் போட்டோ போட்டு சொன்ன லாஸ்லியா !

பிக்பாஸில் இருந்து வெளியேறியே லாஸ்லியா ! கவின் படத்தை வெளியிட்டு பரபரப்பு ! வெற்றிகரமாக பிக்பாஸ் சீசன் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்த நிலையில் கவின் குறித்த டிவிட் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார் லாஸ்லியா. விஜய் டிவியில் 100 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்து பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் பல்வேறு காலகட்டங்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 

பிக்பாஸில் இருந்து வெளியேறியே லாஸ்லியா ! கவின் படத்தை வெளியிட்டு பரபரப்பு !

வெற்றிகரமாக பிக்பாஸ் சீசன் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்த நிலையில் கவின் குறித்த டிவிட் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார் லாஸ்லியா.

விஜய் டிவியில் 100 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்து பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் பல்வேறு காலகட்டங்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடைசியாக முகென், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் லாஸ்லியா பல்வேறு இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்திழுத்தார். இவரது வசீகர தோற்றம் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிகள் கூட உருவானது.

ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லாஸ்லியா ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் சேரனை தந்தையை போல பாவித்து வந்த லாஸ்லியா கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த போதும் இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை. இவருக்கும் சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் சண்டை எற்பட்டது. ஆனால் இவருக்கு உறுதுணையாக கவின் எப்போதும் இருந்துவந்தார். அதேபோல கவின் விஷயத்தில் யாராவது குறை சொன்னால் உடனே பொங்கி விழுந்து விடுவார் லாஸ்லியா. இறுதி போட்டியில் பேசிய லாஸ்லியா, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக கவினுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நான் வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் எல்லாம் கூட போட்டார் என்று கூறி இருந்தார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர்கள் இணைந்து படம் அல்லது சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாஸ்லியா, எதிர்பாராததை எதிர்பாருங்கள், மிக்க நன்றிகள் விஜய் டிவி, கமல் சார், Game Changer என்று. பதிவிட்டுள்ளார் லாஸ்லியா Game Changer என்று குறிப்பிட்டுள்ளது கவின் தான் என்று ரசிகர்கள் சுலபமாக புரிந்து கொண்டனர்.