கவினை நினைத்து கண்கலங்கிய லாஸ்லியா: வைரல் வீடியோ!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் தர்ஷன், முகின், சாண்டி, கவின், சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியானது நேற்று மாலை 3 மணியளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. ஆட்டம், பாட்டம், கலாட்டா என கலகலப்பாக சென்ற நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன.
அதில் கவின் தனது பிக் பாஸ் அனுபவம் குறித்து பேச துவங்கிய சில நிமிடங்களில் அவரை பேசவிடாத அளவிற்கு அவரது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் கோபிநாத், இது தானாக சேர்ந்த கூட்டமா? கவின் தம்பியாக பார்த்துவிட்டு அவனுக்கு கிடைக்கும் இந்த கைதட்டல்களை பார்க்கும் போது, கொஞ்சம் பயமாக உள்ளது என்று கூறினார்.
கவினுக்கு கிடைத்துள்ள இந்த புகழை கண்டு அங்கிருந்த லாஸ்லியா, கண்கலங்கினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.