×

‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்: ஆனா அது தர்ஷன் இல்லப்பா…!

லைகா புரடக்ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பணியாற்றிய பிரபலம் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த
 

லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பணியாற்றிய பிரபலம் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும்  போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியைப்  படமாக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஸ்டைலிஷராக பணியாற்றிய அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்திலும் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார். வயதான தோற்றத்தில் வரும் கமல் ஹாசனுக்கு ஏற்ற ஆடை அலங்காரங்களை பிஸியாக  தேர்வு செய்து வருகிறார்  அம்ரிதா. இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2  படத்தில் பணியாற்றியிருக்கிறார். 

நடிகை  காஜல் அகர்வால்  இந்தியன் 2 படத்தில்  கமல் ஹாசன்  மனைவியாகி 85 வயதான அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.