×

நவராத்திரிக்காக மீண்டும் எழுந்தருளியுள்ள அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். 40 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 1ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஆகஸ்ட் 17ல் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதர் வைபவத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கொலு பொம்மை தயாரிப்போர் நின்ற நிலை மற்றும் சயன கோலத்திலுள்ள அத்தி வரதர்,
 

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும்.  40 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 1ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஆகஸ்ட் 17ல் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதர் வைபவத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். 

இந்நிலையில்  காஞ்சிபுரத்தில் கொலு பொம்மை தயாரிப்போர் நின்ற நிலை மற்றும் சயன கோலத்திலுள்ள அத்தி வரதர், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், சடாரி உள்ளிட்ட பொம்மைபொம்மை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்படும். வழக்கமாக பெருமாள், அம்பாள் பொம்மைகள் அதிகளவு விற்பனையாகும். இந்தாண்டு அத்திவரதர் மிகவும் பிரபலமடைந்ததால், சயன கோலம், நின்ற கோலத்தில் பொம்மைகள்தான் அதிகம் விற்பனையாவதாக கொலு பொம்மைகள் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தவகையில் இந்த ஆண்டு நவராத்திரி கொலு பொம்மைகளின் அணிவகுப்பில் புதுவரவாக அத்திவரதர் எழுந்தருளியுள்ளார்.  10 இன்ச் அளவுள்ள அத்திவரதர் பொம்மை முதல் 2 அடி உயரம் வரை அத்திவரதர் பொம்மைகள் கிடைக்கின்றன. ஆன்லைனில் கூட அத்திவரதர் அவதாரம் எடுத்துள்ளார். கொலு வைக்காத வீடுகளிலும் இந்த அத்திவரதர் பொம்மைகள் இடம்பெற்றிருப்பது கூடுதல் ஸ்பெஷல்…