×

ஈஷா யோகா மையத்தில் களைக்கட்டும் நவராத்திரி 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் நவராத்திரி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. நவராத்திரி திருவிழாவையொட்டி சிறப்பு மந்திர உச்சாடனை, அர்ப்பணைகள், விளக்கு பூஜை, பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், பக்தர்களுக்கென பிரத்தியேகமாக நவராத்திரி சாதனா, மேலும், வண்ணமயமான லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலத்தோடு நந்தியின் முன்னே நடைபெறும் மஹாஆரத்தி என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதாக ஈஷா மையம்
 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் நவராத்திரி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. 

நவராத்திரி திருவிழாவையொட்டி சிறப்பு மந்திர உச்சாடனை, அர்ப்பணைகள், விளக்கு பூஜை, பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், பக்தர்களுக்கென பிரத்தியேகமாக நவராத்திரி சாதனா, மேலும், வண்ணமயமான லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலத்தோடு நந்தியின் முன்னே நடைபெறும் மஹாஆரத்தி என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதாக ஈஷா மையம் தெரிவித்துள்ளது. நவராத்திரி திருவிழாவின் ஒன்பது நாட்கள் கொண்டாட்டமானது  செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 அன்று அதாவது விஜயதசமி என்று முடிவடைகிறது. இதற்காக அங்கு கொழுக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தினந்தோறும் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதனை பார்ப்பதற்காகவே ஈஷா யோகா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.