×

நீண்ட நேரம் மகளுடன் காத்திருப்பு: கடமையை செய்ய அழைக்கும் கமல் ஹாசன்

மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வாக்களித்தனர். சென்னை : சென்னையில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வாக்களித்தனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில்
 

மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வாக்களித்தனர். 

சென்னை : சென்னையில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வாக்களித்தனர். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து  தமிழகம்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.

சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில்  ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர். நடிகர் அஜீத், விஜய், நடிகர் சூர்யா, கார்த்தி  உட்பட நடிகர், நடிகைகளும் பலர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்குத் தனது வாக்கினைச் செலுத்த வந்தார். ஆனால் அங்கு வாக்குப் பதிவு எந்திரம் பழுதடைந்ததால், அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்.

இதையடுத்து அங்கிருந்த இயந்திர கோளாறு  சரிபார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது வாக்கை  செலுத்தினார். அவரை  தொடர்ந்து அவளது மகளும் தன் ஓட்டை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல் ஹாசன், என் கடமையை நான் செய்து விட்டேன். மற்றவர்களும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்’ என்றார். 

 

இதையும் வாசிக்க: களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா: தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்