×

20 திமுக வாரிசுகள் சட்டமன்ற தேர்தலில் போட்டி- முதல்வர் பழனிசாமி

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜுவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனார். பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “செல்லூர் ராஜு தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மதிப்புள்ள வேட்பாளர் இவர். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி, ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சிக்குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்பிவருகிறார். இந்த தேர்தலில்
 

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜுவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனார்.

பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “செல்லூர் ராஜு தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மதிப்புள்ள வேட்பாளர் இவர். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி, ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சிக்குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்பிவருகிறார். இந்த தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக குடும்பம் நாட்டின் நிதிகளை கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர். திமுகவைப் பொறுத்தவரை 20 வாரிசுகள் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்றனர்.மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்” எனக் கூறினார்.