×

“திமுக தேர்தல் அறிக்கைக்கு 100 மார்க்… ஸ்டாலின் தான் முதல்வர்” – மோடி ஆதரவாளர் ராமசுப்பிரமணியன் தடாலடி!

பாஜக ஆதரவாளர், மோடி ஆதரவாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், ஆண்டாள் பக்தர் என பல்வேறு அவதாரங்களுக்கு உரித்தானவர் பிரபல அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன். எந்த அவதாரம் கொடுத்தாலும் கன கச்சிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு அதகளம் செய்வார். வடிவேலுக்கு அடுத்தபடியாக மீம் கிரியேட்டர்ஸ்களின் செல்லப்பிள்ளை. தடாலடியால் மாற்று கருத்துள்ளவர்களுடன் சண்டை செய்து விவாதத்தை நிறுத்துபவர் என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர் தான் ராமசுப்பிரமணியன். பாஜகவுக்காக முரட்டுத்தனமாக பல பேரை சம்பவம் செய்த ராமசுப்பிரமணியனை 2018ஆம் ஆண்டு அப்போதைய தமிழக
 

பாஜக ஆதரவாளர், மோடி ஆதரவாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், ஆண்டாள் பக்தர் என பல்வேறு அவதாரங்களுக்கு உரித்தானவர் பிரபல அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன். எந்த அவதாரம் கொடுத்தாலும் கன கச்சிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு அதகளம் செய்வார். வடிவேலுக்கு அடுத்தபடியாக மீம் கிரியேட்டர்ஸ்களின் செல்லப்பிள்ளை. தடாலடியால் மாற்று கருத்துள்ளவர்களுடன் சண்டை செய்து விவாதத்தை நிறுத்துபவர் என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர் தான் ராமசுப்பிரமணியன்.

பாஜகவுக்காக முரட்டுத்தனமாக பல பேரை சம்பவம் செய்த ராமசுப்பிரமணியனை 2018ஆம் ஆண்டு அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி நீக்கினார். இந்த நீக்கம் அவரை விட மீம் கிரியேட்டர்ஸ்க்கு தான் அதிக வலியை ஏற்படுத்தியது. அதிலிருந்து தற்போது வரை அரசியலிலிருந்து அண்ணார் ஒதுங்கியிருந்தார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். ஆம் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது திமுகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.

இணைந்த கையோடு தற்போது திமுகவை வானளவு புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதிலிருந்து ஒரு துணுக்கை மட்டும் பார்ப்போம். திமுக தேர்தல் அறிக்கை பல்வேறு தொலைநோக்கு பார்வையுடன் இருப்பதாகக் கூறியுள்ள அவர், அதற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் திமுக பிரமாண்டமாக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமருவார் என்றும் நம்பிக்கையளித்திருக்கிறார்.