×

வெற்றிகரமான நான்காவது தோல்வியை நோக்கி தமிழிசை

ஏற்கெனவே இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், ஒரு மாநிலங்களவை தேர்தலிலும் தோல்வியை தழுவிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு இது வெற்றிகரமான நான்காவது தோல்வி. தேர்தல் களத்தில் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கிற தேர்தலில் திமுகவின் கனிமொழி 5.30 மணிவாக்கில் 4 லட்சத்து 42,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு வெகுதொலைவில் பின்னால் வரும் பாஜக மாநில தலைவர் தமிழிசை ஒரு லட்சத்து 68,000 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் லட்சம் என்பதில்
 

ஏற்கெனவே இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், ஒரு மாநிலங்களவை தேர்தலிலும் தோல்வியை தழுவிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு இது வெற்றிகரமான நான்காவது தோல்வி.

தேர்தல் களத்தில் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கிற தேர்தலில் திமுகவின் கனிமொழி 5.30 மணிவாக்கில் 4 லட்சத்து 42,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு வெகுதொலைவில் பின்னால் வரும் பாஜக மாநில தலைவர் தமிழிசை ஒரு லட்சத்து 68,000 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் லட்சம் என்பதில் இருந்து மேலும் அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடி தொகுதியில் ஒன்பது லட்சத்து 83,997 வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான மொத்த வாக்குகளில் சரிபாதியை அதாவது வெற்றிக்கோட்டை கனிமொழி இன்னும் ஒரு சில சுற்று முடிவுகளில் தொட்டுவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இருமுறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த கனிமொழிக்கு இதுதான் முதல் மக்களவை தேர்தல்.

ஏற்கெனவே இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், ஒரு மாநிலங்களவை தேர்தலிலும் தோல்வியை தழுவிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு இது வெற்றிகரமான நான்காவது தோல்வி.