×

விசிக பிரமுகர் கார் கதவுகளில் கட்டுக்கட்டாக பணம்; பறக்கும் படையினர் கிடுக்கிப்பிடி விசாரணை!

தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது விழுப்புரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரின் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை
 

தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

விழுப்புரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரின் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்பட்சமாக ரூ.108.75 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் தங்கதுரை என்பவர் காரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்துச் செல்வதாக பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட காரை மடக்கிய அவர்கள், பலத்த பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கார் கதவுகளின் இடுக்கில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த பணத்தை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றிற்கான ஆவணங்கள் ஏதுவும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். காரில் இருந்து ரூ.2.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் பணம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியானது: 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை!