×

வி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்! ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு!?

சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் யார் வேட்பாளர் என்று யூகங்களும் வதந்திகளும் தினம் ஒன்றாய் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன சிவகங்கை முழுவதும்.. சிவகங்கை தொகுதி அது சிவகங்கையின் ராசி! ப.சிதம்பரம் தோத்துட்டாரு,ராஜ.கண்ணப்பன் ஜெயிச்சுட்டாரு… ஆனால் டெல்லில இருந்து கூப்பிட்டு மிரட்டி ரீ கவுண்டிங் வச்சுதான்
 

சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் யார் வேட்பாளர் என்று யூகங்களும் வதந்திகளும் தினம் ஒன்றாய் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன சிவகங்கை முழுவதும்..

சிவகங்கை தொகுதி

அது சிவகங்கையின் ராசி! ப.சிதம்பரம் தோத்துட்டாரு,ராஜ.கண்ணப்பன்               ஜெயிச்சுட்டாரு… ஆனால்  டெல்லில இருந்து கூப்பிட்டு மிரட்டி ரீ கவுண்டிங் வச்சுதான் சிதம்பரம் ஜெயிச்சார் என்று உள்ளூர் டீக்கடை அரசியல் விமர்சகர்கள் முதல்,செளகிதாத் சாப் வரை பேசுவார்கள்.அது தெரியாதா,சிதம்பரம் நிதியமைச்சராக வரக்கூடாதுங்கறதுக்காக பாம்பேல இருந்தும் குஜராத்துல இருந்தும் சேட்டுக பெட்டி பெட்டிய பணத்தோட வந்து அள்ளி விட்டாங்க தெரியுமா என்பார்கள் எதிரணியினர்.

 

பலியாகுமா எம்.பி செந்தில்நாதன்  அமைச்சர் பாஸ்கர் நட்பு!

ப.சிதம்பரத்தையும் ராஜ கண்ணப்பனையும் விட்டால் தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்கள் இந்த தொகுதியில் யாருமில்லை! இப்போதைய எம்.பி செந்தில்நாதனுக்கும் அமைச்சர் பாஸ்கருக்கும் இடையே இருந்த நட்பை இந்த பாராளுமன்ற தேர்தல் பலி கொண்டுவிட்டது.

 

அடம்பிடிக்கும் எம்பி ; முரண்டு பிடிக்கும் அமைச்சர் 

அமைச்சர் பாஸ்கரன்,தன் மகன் கருணாகரனை எம்.பி ஆக்க ஆசைப்படுகிறார்.செந்தில் நாதனோ நான்தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கிறார்.

 

சிவகங்கையில் களமிறங்கும் ஹெச்.ராஜா?

இந்த இருவரையும் விட்டால் அ.தி.மு.க-வுக்கு அடுத்த சாய்ஸ் ராஜ.கண்ணப்பந்தான்.ஆனால்,அவர் ஒ.பி.எஸ்,ஈ.பி.எஸ்ஸுக்கெல்லாம் சூப்பர் சீனியர்.அதனால் எதற்கு வம்பு என்று சிவகங்கைய பி.ஜே.பி-க்கு தாரைவார்த்து விட்டது அ.தி.மு.க.அடுத்த நாளே,அங்கே ஹெச்.ராஜாவை நிறுத்தக்கூடாது என்ற கண்டிசனோடுதான் சிவகங்கை விட்டுக்கொடுக்கபட்டது என்று ஒரு புதிய வதந்தி கிளம்பியது.

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாய்ப்பு?

அதற்கேற்ப பி.ஜே.பி இன்னும் வேட்பாளர் லிஸ்டை வெளியிடாமல் தாமதிப்பது இந்த வதந்திகளுக்கு வலுச்சேர்க்கிறது.ஆரம்பம் முதலே தி.மு.க கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்குத்தான் என்பதில் யாருக்கு குழப்பமில்லை. ஆனால் வேட்பாளர் யார்? சிதம்பரம் ராஜ்யசபை உறுப்பினராக இருப்பதால் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் நிற்கிறார் என்றனர்.

 

 

அவர் கடந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி நிற்கிறார் என்றார்கள்,கடைசியில் அதெல்லாம் இல்லை சிவகங்கைத் தொகுதியில் ஒரு புதிய சர்ப்ரைஸ் வேட்பாளரை களமிறக்கப் போகிறது காங்கிரஸ்.

ஜாதி ஓட்டுகள் பலம்

அது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியாகக்கூட இருக்கலாம் என்பது இன்றைய சிவகங்கை நிலவரம்.பி.ஜே.பி-யின் தயக்கத்துக்கு காரணம் ஜாதி ஓட்டுகள். சிதம்பரம்,கண்ணப்பன்,செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்.ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு.அவருக்காக வேலை செய்ய பி.ஜே.பி-யில் உள்ளூர் இளைஞர்கள் நூறு பேர்கூட தேர மாட்டார்கள் என்பது நிதர்சனம்.புகழ் பெற்ற சிராவயல் ஜல்லிக்கட்டு இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் விழா.ஜல்லிக்கட்டு போராடத்தின்போது ராஜா பேசிய பேச்சுக்களை உள்ளூர் இளைஞத்கள் மறக்கவில்லை.

வதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது!?

அ.தி.மு.க ஆதரவிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.உள்ளூர் அ.தி.மு.க-வுடன் ராஜாவுக்கு.சுமுக உறவு இருந்ததே இல்லை.என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் சிவகங்கை மக்களுக்கு வதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது!?