×

ராஜா சீட் கேட்டா அது ராங்கா போனதில்ல: அ.தி.மு.க-வை அலறவிட்ட எச். ராஜா?!..

யாருமே எதிர்பார்க்காத விதமாய் எச். ராஜாவுக்கு சிவகங்கையில் சீட் கொடுத்தது பற்றிய ரகசியம் அம்பலமாகியுள்ளது!.. யாருமே எதிர்பார்க்காத விதமாய் எச். ராஜாவுக்கு சிவகங்கையில் சீட் கொடுத்தது பற்றிய ரகசியம் அம்பலமாகியுள்ளது!.. மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்தது பாஜக. தமிழக மக்களுக்கு பாஜக மீது அதிருப்தி இருந்தாலும் அதை அதிமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை. பாஜக கட்சிக்கு 5 சீட் ஒதுக்கியது, நோட்டாவோடு போட்டியிடும் கட்சிக்கு இத்தனை சீட்டா என பலருக்கும் ஆச்சரியம். சரி 5 சீட்
 

யாருமே எதிர்பார்க்காத விதமாய் எச். ராஜாவுக்கு சிவகங்கையில் சீட் கொடுத்தது பற்றிய ரகசியம் அம்பலமாகியுள்ளது!..

யாருமே எதிர்பார்க்காத விதமாய் எச். ராஜாவுக்கு சிவகங்கையில் சீட் கொடுத்தது பற்றிய ரகசியம் அம்பலமாகியுள்ளது!..

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்தது பாஜக. தமிழக மக்களுக்கு பாஜக மீது அதிருப்தி இருந்தாலும் அதை அதிமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை. பாஜக கட்சிக்கு 5 சீட் ஒதுக்கியது, நோட்டாவோடு போட்டியிடும் கட்சிக்கு இத்தனை சீட்டா என பலருக்கும் ஆச்சரியம். சரி  5 சீட் கொடுத்துவிட்டார்கள், வேட்பாளர்களாக யாரை அறிவிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது. 

தமிழகத்தில் பிரபலமான பாஜக தலைவர்களே வெகு சிலர்தான். தமிழிசை சவுந்தராஜன், எச். ராஜா மற்றும் பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட சிலரை மட்டுமே பலருக்கும் தெரியும். இந்நிலையில், எச். ராஜா தவிர யாருக்கு வேண்டுமானாலும் சீட் வழங்க தயார் என அதிமுக தரப்பு பாஜகவுடன் உடன்படிக்கை செய்திருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதற்கு ஏற்றார் போல், கூட்டணி அமைக்கும் வேளையில் எச். ராஜாவும் அங்கு இல்லை.

அதன்பிறகு அதிமுக தரப்பில் இருந்து பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் வெளியானது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய 5 தொகுதிகள் வழங்கப்பட்டன. வேட்பாளர்கள் பட்டியலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிக்கும் முன்பே சிவகங்கை பிரச்சாரத்துக்கு சென்ற எச். ராஜா அறிவித்துவிட்டார். அதில் சிவகங்கை தொகுதியின் தான் நிற்கப் போவதையும் உறுதிபடுத்தினர். இதனால் கடுப்பான தமிழிசை சவுந்தராஜன், நான் தலைவரா அவர் தலைவரா என்று கடுகடுத்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, எச். ராஜாவுக்கு எப்படி சீட் கிடைத்தது என்பதுதான் பலருக்கு ஆச்சரியமான விஷயம்.

எப்போதும் சர்ச்சையை சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு அலையும் எச். ராஜாவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது ஒரு சோகக் கதை. நீதிமன்றத்தை மயிர் என்றது, மெர்சல் பட விவகாரத்தில் ஜோசப் விஜய் என மதப்பிரச்சனையை கிளப்ப முயன்றது, பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கருத்து தெரிவித்தது, இப்படியாக எச். ராஜா மீது சர்ச்சைகள் ஏராளம். தமிழக மக்களிடமும் அவருக்கு பெரிதாக நன்மதிப்பு இல்லை. ஆனால் எச். ராஜாவுக்கு தமிழிசையை விட மத்திய பாஜகவில் செல்வாக்கு அதிகம்.

மோடியின் மொழிபெயர்பாளராய் திகழும் எச். ராஜாவுக்கு மாநிலங்களவையில் சீட்டு ஒதுக்குகிறோம் என பாஜக தலைமை தெரிவித்துள்ளது. ஆனால் எச். ராஜா அடம்பிடித்து சிவகங்கை தொகுதியை கேட்டிருக்கிறார், அதனால் பாஜக தலைமை அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து எச். ராஜா விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது. நீண்டகால அதிமுக விஸ்வாசிகள் இதனால் செம கடுப்பில் இருக்கிறார்கள். ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது!